சொன்னதை செய்த கருணாநிதி- ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வராகப் பதவியேற்ற உடனேயே திமுக தேர்தல் அறிக்கையில்சொல்லப்பட்டிருந்த மூன்று முக்கிய வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதிநிறைவேற்றி மக்களின் நம்பிக்கையை பெற்று விட்டார் என்று பாமக நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

சேற்றில் இறங்கி உழுது, பயிரிட்டுக் கட்டுப்படியான விலை கிடைக்காத காரணத்தால்லட்சக்கணக்கான உழவர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கலங்கி நின்றனர்.

அவர்களின் கலக்கத்தை, வேதனையை முதல்வர் கருணாநிதி தலைமையிலானஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு ஒரே ஆணையின் மூலம் போக்கியிருக்கிறது.

முதல்வராகப் பொறுப்பேற்றதும் தன்னுடைய முதல் ஆணையாக 2 ரூபாய்க்கு 1கிலோ அரிசி வழங்கப்படும் என்றும், உழவர்களின் கூட்டுறவுக் கடன் ரூ. 6,866 கோடிதள்ளுபடி செய்யப்படும் என்றும்,

சத்துணவில் வாரம் இருமுறை முட்டை வழங்கப்படும் என்றும், அதுவும்பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை கல்விக் கண் திறந்த நாளாகக் கொண்டாடிஅன்று முதல் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார் கலைஞர்.

அதற்கான கோப்பில் பொதுமக்கள், கூட்டணித் தலைவர்கள் முன்னிலையில்ஒப்பமிட்டிருக்கிறார்.

இதை பாமக மகிழ்ச்சியோட வரவேற்கிறது. தேர்தலில் திமுகவும், கூட்டணிக்கட்சிகளும் அளித்த வாக்குறுதிகளை பதவியேற்ற நாளிலேயே நிறைவேற்றிச் சாதனைஏற்படுத்தியிருப்பதன் மூலம் இந்த அரசு மீது மக்களின் நம்பகத்தன்மையைபன்மடங்கு உயர்த்தியிருக்கிறார்.

இதன் மூலம் இந்த அரசு மக்கள் நல அரசு என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுநம்முடைய அரசு என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதேபோல இதர வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வைக்கும் ஆணைகள் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+