வாக்குகளை அள்ளிய ஐஐடி மாணவர்கள் கட்சி!
சென்னை:
போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 34,000 வாக்குகளைப் பெற்று முன்னாள் ஐ.ஐ.டி.மாணவர்களின் லோக் பரித்ரன் கட்சி சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல்களில் தீவிரமாகக் களமிறங்க இந்தக் கட்சிதிட்டமிட்டுள்ளது.நல்லாட்சி, வெளிப்படையான நிர்வாகம், லஞ்ச ஒழிப்பு ஆகிய முக்கிய அம்சங்களைமுன் வைத்த சட்டசபைத் தேர்தலை சந்தித்தது லோக் பரித்ரன்.
சென்னை ஐ.ஐ.டியில் படித்து உயர் பதவிகளில் இருக்கும் பலர் இந்தக் கட்சியைஆரம்பித்தனர்.
சட்டசபைத் தேர்தலில் சென்னையில் உள்ள சில தொகுதிகள் மற்றும் ராமநாதபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் இந்த முன்னாள் ஐஐடி மாணவர்கள்போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகளுக்கு இணையாக இவர்களும் தீவிரமாக பிரசாரம் செய்தனர். உயர்படிப்பு படித்துள்ள இவர்களுக்கு சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
கோடாலி, அரிவாள், தபால் பெட்டி உள்ளிட்ட வித்தியாசமான சின்னங்களுடன்போட்டியிட்ட ஐஐடி மாணவர்கள் கணிசமான வாக்குகளை அள்ளிஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
அண்ணா நகரில் போட்டியிட்ட பரித்ரன் வேட்பாளர் ராஜாமணி 11,665ஓட்டுக்களைப் பெற்றுள்ளார். கட்சியின் தலைமை ஆலோசகர் சந்தான கோபாலன்வாசுதேவ் மயிலாப்பூர் தொகுதியில் 9,436 வாக்குகள் பெற்று மயிலாப்பூர்தொகுதியில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மொத்தமாக இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் 34,000 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து வாசுதேவ் கூறுகையில், வெற்றி, தோல்வியை நினைத்து நாங்கள்போட்டியிடவில்லை. நல்லாட்சி, லஞ்ச ஒழிப்பு, வெளிப்படையான நிர்வாகம் ஆகியகோஷங்களை முன் வைத்துத்தான் தேர்தலை சந்தித்தோம.
இது எங்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. 2009ல் நடைபெறும்நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இப்போதே தயாராகத் தொடங்கி விட்டோம்என்றார்.
மாற்றங்களை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைத்தான் விஜயகாந்த் கட்சி, லோக்பரித்ரன் கட்சி ஆகியவற்றுக்கு எதிர்பாராத அளவுக்கு வாக்குகள் கிடைத்திருப்பதுஉறுதிப்படுத்துகிறது.
பெரிய அளவில் வாக்குகளை அள்ளியுள்ளதால், வரும் உள்ளாட்சித் தேர்தலில்கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு அதிக அளவில் போட்டியிட இந்தக் கட்சி முடிவுசெய்துள்ளது.
இப்போது வாங்கிய வாக்குகளை மீண்டும் வாங்கினாலே மாநகராட்சிகள் உள்ளிட்டஉள்ளாட்சி அமைப்புகளில் இவர்களால் எளிதாக நுழைந்துவிட முடியும்.












Click it and Unblock the Notifications