சட்டசபை அவை முன்னவர் அன்பழகன்
சென்னை:
தமிழக சட்டசபையின் முன்னவராக நிதியமைச்சர் க.அன்பழகன்நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சி கடந்த 13ம் தேதி பதவியேற்றது. முதல்வராக கருணாநிதியும், 30அமைச்சர்களும் அன்று பதவியேற்றனர். நாளை மறுநாள் புதிய உறுப்பினர்கள்பதவியேற்கவுள்ளனர்.இந் நிலையில், சட்டசபை முன்னவராக க.அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கருணாநிதி படங்களுக்கு திடீர் கிராக்கி
இதற்கிடையே முதல்வர் கருணாநிதியின் புகைப்படங்களைத் தேடி காவல் துறையினரும்,அரசின் பல்வேறு துறையினரும் தேடி ஓடி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக சங்கடத்திற்குஆளாகியுள்ளவர்கள் அரசுத் துறையினரும், காவல் துறையினரும்தான். கடந்த ஐந்துஆண்டுகளாக அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் அம்மாவின் படம்தான்அலங்கரித்துக் கொண்டிருந்தது.
இப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால்,ஜெயலலிதாவின் புகைப்படங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர். மேலும் முதல்வர்கருணாநிதியின் புகைப்படங்களை அவசரம் அவசரமாக மாட்டி வருகின்றனர்.
இதில் பெரிய காமெடி என்னவென்றால் போலீஸ் நிலையங்களில்தான்ஜெயலலிதாவின் படங்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.
பெரும்பாலான காவல் நிலையங்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கூடஜெயலலிதாவின் புகைப்படங்களை மாற்றவில்லை.
இப்போதுதான் அவசர அவசரமாக கருணாநிதி புகைப்படத்தை மாட்டி வருகின்றனர்.பலருக்கு கருணாநதியின் புகைப்படம் கிடைக்காமல் அண்ணா அறிவாலயத்தைத்தொடர்பு கொண்டு கருணாநிதி படம் இருந்தா கொடுங்க ப்ளீஸ் என்று கேட்டு வாங்கிமாட்டி வருகின்றனர்.
அதிலும், மஞ்சள் துண்டுடன் கருணாநிதி இருக்கும் புகைப்படமாக கேட்டு வாங்கிவருகின்றனர் காவல் துறையினர். கருணாநிதியின் புகைப்படங்கள் வேகம் வேகமாகமாட்டப்பட்டு வந்தாலும் கூட, முதல்வரின் அதிகாரப்பூர்வ படமாக எதுஅறிவிக்கப்படுகிறதோ அந்ததப் புகைப்படம்தான் அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்களை அலங்கரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications