அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பதவி: அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பதவிக்கு வரலாம் என்று முதல்வர்கருணாநிதி தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்த முதல்அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கத்தில் காலை 10மணிக்கு நடந்த இக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.சட்டசபைக் கூட்டத் தொடர், ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள்குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் பதவியில் நியமிக்க அமைச்சரவைக் கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டு, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது.இதுதொடர்பாக முறையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

சென்னை கடற்கரையில் நிறுவப்பட்டு கடந்த ஜெயலலிதா ஆட்சியால் அகற்றப்பட்டகற்புக்கரசி கண்ணகி சிலை இன்னும் 15 நாட்களில் அதே இடத்தில் நிறுவப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி ஏழை, எளியமக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படும். அதற்கான செயலாக்கத் திட்டம்விரைவில் தொடங்கும். திட்ட வரைவு இறுதியானவுடன் டிவி வழங்குவதுதொடர்பான விரிவான விவரங்கள் வெளியிடப்படும்.

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர்வந்து கொண்டுள்ளது. மழையும் பெய்து வருகிறது. எனவே ஜூன் மாதம்திட்டமிட்டபடி, திட்டமிட்ட நாளில் காவிரிப் பாசனத்திற்காக அணையைத் திறக்கமுடியும் என்றார்.

ஆளுநர் உரையில் இலவச கலர் டிவி:

ஆளுனர் உரை தொடர்பாக முதல்வர் கருணாநிதி நேற்று முழுவதும் தீவிரஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். மாலையிலும் அவர் கோட்டைக்கு வந்துஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்கு இலவச டிவி வழங்கும் திட்டம் குறித்தஅறிவிப்பை ஆளுநர் உரையில் இடம் பெறச் செய்ய சேர்க்க கருணாநிதிதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாளை திருவாரூர் பயணம்:

முதல்வராகப் பொறுப்பேற்ற பின் நாளை முதல் முறையாக கருணாநிதி திருவாரூர் செல்கிறார். அங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

நாளை காலை எம்எல்ஏவாக பதவியேற்கும் கருணாநிதி பின்னர் தனது சொந்த ஊரான திருவாரூர் சென்று, பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அடுத்த நாள் காலை திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திவிட்டு சென்னை திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+