பாண்டு வெற்றியை எதிர்த்து பாமக போராட்டம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

அணைக்கட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் வெற்றி பெற்றாதுசெல்லாது என்று அறிவிக்கக் கோரி வேலூரில் பாமகவினர் நடத்திய போராட்டத்தால்பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு தொகுதியில் அதிமுக சார்பில் கும்பிடு புகழ் பாண்டுரங்கனும், பாமகசார்பில் வரலட்சுயும் போட்டியிட்டனர்.

இதில் 53 வாக்குகள் வித்தியாசத்தில் பாண்டுரங்கன் தப்பிப் பிழைத்து வெற்றிபெற்றார். வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு வாக்கு எந்திரத்தில் கோளாறுஏற்பட்டது. இதனால் முடிவை அறிவிப்பது தாமதமாகியது.

பெங்களூரிலிருந்து பாரத் எலெக்ட்ரானிஸ் நிறுவனப் பொறியாளரை வரவழைத்துஎந்திரத்தை சரி செய்த பின்னரே அதில் பதிவான வாக்குகளை எண்ண முடிந்தது.

அதன்படி வாக்குகள் எண்ணியதில் பாண்டுரங்கன் வெறும் 53 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல்அதிகாரியுமான கோபாலகிருஷ்ணன் இரவோடு இரவாக அறிவித்துவிட்டனர்.

அப்போது பாமகவினர் யாரும் அங்கில்லை என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் தேர்தல் முடிவை பாமகவினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் பாண்டுரங்கனுக்கு ஆதரவாகசெயல்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறிஅவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாண்டு ஜெயித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி வேலூர் தலைமை தபால்நிலையம் அருகே பாமகவினர் மாநிலத் துணைத் தலைவர் என்.டி.சண்முகம் தலைமையில் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து பாமகவினர் சாலை மறியலிலும் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பாமகவினர்தாங்களாகவே கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+