இளைஞர் சுய உதவி குழுக்கள்: சென்னையில் புதிய புறநகர்கள்-கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போல புதிதாக இளைஞர்கள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,இளைஞர் சுய உதவிக் குழுக்களும், ஏற்கனவே உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களும் சேர்ந்து முட்டைகளை உற்பத்தி செய்வார்கள். இவர்களிடமிருந்துசத்துணவில் வழங்கப்படும் முட்டைகளை அரசு கொள்முதல் செய்து கொள்ளும்.
மாதந்தோறும் கோடிக்கணக்கான முட்டைகளை அரசு வாங்க உள்ளதால் அவர்களுக்கு மிகச் சிறந்தவியாபாரமும் லாபமும் கிடைக்கும்.
சென்னையில் புதிய புறநகர்கள்:
சென்னை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி, இட நெருக்கடியை சமாளிக்கசென்னைக்கு வெளியே புதிதாக புறநகர்கள் அமைக்கப்படும்.
வறுமைக் கோட்டுக்கு மிகவும் கீழே இருப்பார், தங்களுக்குரிய ரேஷன் அரிசியைஅந்தந்த மாதத்திற்குள், எப்போது வேண்டுமானாலும் போய் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் அந்த அரிசியை மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ தங்களதுவிருப்பம் போல கிலோ அரிசி 2 ரூபாய்க் கணக்கில் வாங்கிக் கொள்ளலாம்.
திமுக எம்.எல்.ஏக்களை காட்டுமிராண்டிகள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.தன்னைப் போலவே பிறரையும் அவர் எண்ணியுள்ளார் போலும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications