அனைத்து ஜாதி அர்ச்சகர்கள்-விஎச்பி வரவேற்பு
சென்னை:
அனைத்து சாதியினரும் கோவில் அர்ச்சகராக பணியாற்றலாம் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளதற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்தும், நன்றியும்தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்துசாதியினரும் அர்ச்சகர்களாக பணியாற்றலாம் என்று அரசாணை பிறப்பிக்கமுடிவெடுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் பாராட்டுதெரிவித்துள்ளனர்.திராவிடர் கழகத்தின் முக்கியமான நீண்டநாள் கோரிக்கை இது. இதைநிறைவேற்றியுள்ளதற்காக கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாக தி.க. தலைவர்கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் சாதனைகள், ஒரு சரித்திரத்தொடராக, என்றென்றும் வரலாற்றின் வைர வரிகளில் எழுதப்படுபவையாகதொடர்ந்து கொண்டே உள்ளன.
அமைச்சரவையின் முடிவைப் பார்த்து, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளைஎடுப்பதுதான் எனது ஆட்சியின் முதல் குறிக்கோள் என்று அறிவித்த கருணாநிதியின்ராக்கெட் வேக முடிவைக் கேட்டு அவர்கள் தொண்டர்கள் மகிழ்ச்சிக் கண்ணீரில்மிதந்து கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
பின்னர் கருணாநிதியை நேரிலும் சந்தித்து வீரமணி நன்றி தெரிவித்தார்.
பாமக நறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
மின்னல் வேகத்தில் முடிவுகளை எடுத்து வேகமாக அறிவித்து வருகிறார் கருணாநிதி.ஆகம விதிமுறைகளை முறைப்படிக் கற்றுத் தேறியவர்கள் யாராக இருந்தாலும்,அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்,
எல்லோரும் கோவில் அர்ச்சகர்களாகலாம் என்று அரசாணை பிறப்பிக்க முடிவுசெய்திருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது என்றுகூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சி, விஸ்வ இந்து பரிஷத், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள்கட்சி ஆகியவையும் அமைச்சரவை முடிவை வரவேற்றுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications