ஸ்டாலின் மகனும், மருமகனும் தாக்க வந்தார்களாம்: வைகோ சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் அடியாட்கள்,உருட்டுக் கட்டைகள் சகிதம் எனது வீட்டுக்கு வந்தனர். ஆனால் மதிமுக தொண்டர்கள்அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவைகோ,

இந்தத் தேர்தலின்போது நான் கடுமையான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் எடுத்துவைத்தேன். நான் எடுத்து வைத்த சில குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஆத்திரம்அடையும் வகையில், கடுமையான வசைமொழிகள் என் மீது வீசப்பட்டன.

வீசி எறிகின்ற ரொட்டிக்கு குரைக்கின்றன நாய் என்று கூட அறிக்கை விடப்பட்டது.அன்த அறிக்கையில் என்னை குரங்கு என்றும், இன்னும் கடுமையானவார்த்தைகளாலும் திட்டியிருந்தார்கள். சரி கோபத்தில் சொல்கிறார்கள் என்று நான்பொருட்படுத்தவில்லை.

வாக்குகள் எண்ணப்பட்ட தினத்தன்று காலை 8 மணிக்கெல்லாம் நான் தாயகம் வந்துவிட்டேன்.

காலை 11 மணியளவில் எனது மகன் துரை வையாபுரி என்னை தொலைபேசியில்அழைத்து, வீட்டில் இருக்கும் லேண்ட் லைன் போனிலும், அவரது செல்போனிலும்தொடர்ந்து மிக மிக மோசமான வார்த்தைகளை சொல்லி அச்சுறுத்துகின்ற மிரட்டல்வந்து கொண்டே இருக்கிறது. மிகக் கொடிய வார்த்தைகளைச் சொல்லி உன் அப்பனைதீர்த்துக் கட்டாமல் விட மாட்டேன் என்று மிரட்டுகிறார்கள் என்று கூறினார்.

ரோட்டில் வைத்து அவனை வெட்டுவோம், அவனை கொல்லாமல் விட மாட்டோம்என்று என்னை மிகவும் இழிவாகப் பேசியிருக்கிறார்கள். நாங்கள் வீட்டுக்கேவருகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

வீட்டுக்கு அருகே தினசரி வெடி போடுகிறார்கள். அதைப் பற்றி நான் ஒன்றும்ஆட்சேபிக்கவில்லை.

நான் 1 மணிக்கு தாயகத்தில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றேன். சிறிதுநேரத்தில் 2 டாடா சுமோ கார்களில் வந்து வெடி போட்டார்கள்.

மாலை மூன்றரை மணி அளவில் மேலும் 6 வண்டிகளில் வந்தனர். அதிலிருந்துஉருட்டுக் கட்டைகள், இரும்புக் குழாய்கள் போன்றவற்றை எடுத்து வந்தனர்.அவர்களை தடுக்க மதிமுக தொண்டர்கள் திரண்டு வந்தபோது காரில் வந்தவர்கள்அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அவர்கள் வந்த கார்களின் எண்களை நான் குறித்து வைத்துள்ளேன். அவையாருடயவை என்று விசாரித்தபோது ஸ்டாலினின் மகன் உதயநிதியின் கார்கள் என்றுதெரிய வந்தது.

மேலும் அவருடன் வந்தது ஸ்டாலின் மருமகன் சபரீசன் வேதமூர்த்தி என்றும் தெரியவந்துள்ளது. சபரீசன் ஓடும்போது அவருடைய அடையாள அட்டை கீழே விழுந்துவிட்டது. அதை தொண்டர்கள் எடுத்து வைத்துள்ளனர் (அடையாள அட்டையைக்காட்டுகிறார்).

முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி நடந்து கொண்டதை நான் பெரிதாக்கவிரும்பவில்லை. முதல்வர் பதவிப்பிரமாணம் எடுக்கும் நேரத்தில் இதை பெரிதாக்கநான் விரும்பவில்லை. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் எனது வீட்டுலேண்ட் லைன் போனுக்கு பகலில் பேசிய வார்த்தைகளை மீண்டும் கூறி மிரட்டல்கள்விடப்பட்டன.

அந்த பேச்சை நாங்கள் பதிவு செய்து வைத்துள்ளோம். இதைக் கேட்டதும் எனது மகன்அதிர்ச்சி அடைந்து விட்டான்.

இதை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன், அதனால்தான்நடந்ததைச் சொல்லியுள்ளேன். இச்சம்பவங்கள் அனைத்தும் ஏதோ ஒருதிட்டத்தோடுதான் நடந்துள்ளதாக நான் நினைக்கிறேன். சட்டப்பூர்வமாக என்னசெய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றார் வைகோ.

தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்கையில்,

மத்திய அரசின் கூட்டணியில் மதிமுக தொடர்கிறது. நாங்கள் கூட்டணியில்நீடிப்பதற்கு அதிமுக ஆட்சேபனையோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. எனவேநாங்கள் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கிறோம்.

அதேபோல நாங்கள் அதிமுக கூட்டணியிலும் தொடர்ந்து நீடித்து வருகிறோம்,நீடிப்போம். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் சேர்ந்துதான் தேர்தலைசந்திப்போம்.

டாடா விவகாரத்தை நான் மறந்து விடவில்லை. பிரதமரிடம் இதுகுறித்து நிச்சயமாகபேசுவேன். தயாநிதி மாறன் மிரட்டியதை டாடா நிறுவனம் இதுவரை மறுக்கவில்லைஎன்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

அதிமுக சார்பில் மேல்சபை எம்.பி பதவி எனக்குக் கிடைக்கும் என்று கனவில் கூடநான் நினைத்துப் பார்க்கவில்லை. எம்.பி. ஆகும் எண்ணமும் எனக்கு இல்லை.

சட்டசபையை ஜெயலலிதா முழுமையாக புறக்கணிப்பதாகக் கூறவில்லை.காரணங்களைக் கூறியுள்ளார், தேவைப்பட்டால் செல்வேன் என்றும் சொல்லியுள்ளார்.எனவே அவர் முக்கிய விவாதங்களின்போது நிச்சயம் கலந்து கொள்வார் என்றுதான்நான் நினைக்கிறேன்.திமுக, அதிமுகவை விரும்பாதவர்களின் வாக்குகளை விஜயகாந்த் பெற்றுள்ளார்.மதிக்கத்தக்க அளவுக்கு வெற்றியைப் பெற்றுள்ளார். அவரை வாழ்த்துகிறேன்.விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்ப்பதா, இல்லையா என்பது குறித்து கூட்டணித்தலைவரான ஜெயலலிதாதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் வைகோ.

சிங்கள ராணுவ தாக்குதலுக்கு கண்டனம்:

முன்னதாக மதிமுக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. அதில், இலங்கையில் நடந்து வரும் தமிழர்கள் மீதானதாக்குதலை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்தியா தலையிட்டு ராணுவத் தாக்குதலை தடுக்க வேண்டும். இந்தத் தாக்குதல்கண்டனத்துக்குரியது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில்பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது. இதை மதிமுக வரவேற்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சக்திகள்மாணவர்களைத் தூண்டி விட்டு வன்றை வெறியாட்டங்களை நடத்தி வருகிறது. இதைமதிமுக கண்டிக்கிறது என இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சட்டசபைத் தேர்தலில் மதிமுகவுக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றிதெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+