யப்பாடா.. ஒருவழியாக கிளம்பிய பழனிச்சாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவின் முழு ஆதரவுடன் தமிழக தேர்தல் ஆணையர் பதவியில் கடந்த சிலவருடங்களாக நீடித்து வந்த பழனிச்சாமி ஒரு வழியாக தனது பதவியை ராஜினாமாசெய்து விட்டார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு மாநில தேர்தல்ஆணையத்திற்கு உண்டு. இந்த ஆணையத்தின் ஆணையராக பழனிச்சாமி இருந்துவந்தார். இவரது பதவிக்காலம் முடிந்தும் கூட 2 முறை அவருக்கு அதிமுக அரசு பதவிநீட்டிப்பு கொடுத்தது.

மேலும் பழனிச்சாமிக்காக, ஆணையர் பதவிக்கு வயது வரம்பே கிடையாது என்றும்அதிரடியாக சட்ட மசோதாவையும் கொண்டு வந்தது. இதற்கு அரசியல்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

இத்தனைக்கும் இந்தப் பழனிச்சாமி மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ஊழியர்கள் பல்வேறு செக்ஸ் புகார்களை சுமத்தியும் அவருக்கு உறுதுணையாகஇருந்தது அதிமுக அரசு.

சசிகலாவின் ஆசி பெற்ற பழனி, ஆணையர் பதவியில் ஆணி அடித்தது போலஉட்கார்ந்திருந்தார். இவரது பதவி நீட்டிப்பை எதிர்த்து மன்னாள் காங்கிரஸ்சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்தது. இந்தமனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் வரை பழனிச்சாமி தனது பதவியில்நீடிக்கலாம் என்று உத்தரவிட்டது.

அந்தக் கெடு அடுத்த வாரத்தில் முடிவுக்கு வருகிறது.

இந் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதால் பழனிச்சாமி தனது ஆணையர்பதவியை தானாகவே ராஜினாமா செய்துள்ளார்.

மரியாதையாக நீங்களாகவே பதவி விலகி ஓடிப் போய்விட்டால் நல்லது, இல்லாவிட்டால்பெண் ஊழியர்கள் தந்த செக்ஸ் புகார்களை வைத்து உள்ளே தள்ளவும் தயங்கமாட்டோம் என திமுக தரப்பில் இருந்து பழனிச்சாமிக்கு எடுத்துரைக்கப்பட்டதாகதெரிகிறது.

இதையடுத்து அவசர அவசரமாக தானாகவே பதவி விலகி ஓடியுள்ளார் பழனி. தனதுராஜினாமா கடிதத்தை நேரடியாக அரசிடம் வழங்காமல் ஆளுநர் பர்னாலாவுக்கு அவர்அனுப்பி வைத்துள்ளார்.

ஆளுநர் அந்தக் கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்துபழனிச்சாமியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தமிழக அரசுஅறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+