இலங்கையில் அமைதி-கருணாநிதி விருப்பம்
சென்னை:
இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிகூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை, பாமக எம்.எல்.ஏக்கள் இன்றுசந்தித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதுதான் எனது ஆசை.இலங்கையில் தற்போது உள்ள நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்துமுழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், தேவைப்பட்டால் இதுகுறித்து பிரதமருடன்ஆலோசனை நடத்துவேன் என்றார்.
முன்னதாக தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டிபயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை கருணாநிதி வாசிக்க, அதை அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் திரும்பக் கூறிஉறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
புலிகள் ஊடுறுவல் இல்லை: கடற்படை
தமிழகத்தில் இதுவரை விடுதலைப் புலிகள் ஊடுறுவல் ஏதும் இல்லை என்றுகடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையுடனான சர்வதேச எல்லைப் பகுதியில் கடற்படையும், கடலோரக் காவல்படையும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடல் வழியாகவும், வான்வழியாகவும் இப்பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் தற்போது போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து அகதிகள் அதிகஅளவில் வந்து கொண்டுள்ளனர். அகதிகள் வருகையை கடற்படையும், கடலோரக்காவல் படையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் கடற்படையும், கடலோரக் காவல்படையும் உஷாராக உள்ளன. இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கும்முக்கியத்துவம்அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எல்லைக்குள் தெரியாமல் நுழைந்து விடும் மீனவர்களை எந்தவிததுன்புறுத்தலும் இன்றி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கைகடற்படையைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு விடுதலைப்புலிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விடாமல் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.இதுவரை புலிகள் ஊடுறுவல் ஏதும் இல்லை என்றார் அருண் பிரகாஷ்.
நடுக்கடலில் அகதிகள் தவிப்பு:
இந் நிலையில் இலங்கையில் இருந்து வந்த 38 பேர் நடுக்கடலில் மணல் திட்டில் உயிருக்குப் போராடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்துகடலோரக் காவல் படை விரைந்துள்ளது.
2 பிளாஸ்டிக் படகுகள் வந்த இவர்களில் ஒரு பிரிவினர் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இறக்கிவிடப்பட்டனர். மேலும் சிலர் முதல் மேடு என்ற இடத்தில்இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள் உணவு, தண்ணீர் இன்றி உயிருக்குப் போராடி வருவதையடுத்து மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications