இணையற்ற பண்பாளர்: கருணாநிதி புகழாரம்
சென்னை:
சட்டசபை சபாநாயகராக இணையற்ற பணியாற்றிய பண்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் என்று முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
பி.டி.ஆர். மறைவு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள கருணாநிதி வெளியிட்டுள்ளஇரங்கல் செய்தியில், சட்டசபை சபாநாயகராக இணையற்ற பணியாற்றியவர்பண்பாளர் பி.டி.ஆர். அவரது அடக்கமும், பண்பும், சான்றான்மையும் எப்போதும்நினைவில் கொள்ளத்தக்கது.அவரது விருப்பப்படி திமுக அமைச்சரவையில் அவருக்கு இந்து சமயஅறநிலையத்துறை ஒதுக்கப்பட்டது. ஆனால் பணியில் முழுமையான காலமும்பணியாற்ற முடியாமல் இயற்கை நம்மிடமிருந்து அவரைப் பறித்துக் கொண்டது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனதுஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
கிருஷ்ணசாமி இரங்கல்:
பி.டி.ஆர். மறைவு குறித்து காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சட்டசபைத் தலைவராக இருந்தபோதும், பொது வாழ்க்கையில் பல்வேறுபொறுப்புகளில் இருந்தபோதும் அந்தப் பதவிகளுக்குப் பெருமை சேர்த்தவர்பி.டி.ஆர். அவரது மறைவு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கும் பெரும்இழப்பாகும் என்று கூறியுள்ளார்.
தா.பாண்டியன்:
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்,சுயமரியாதை இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் பி.டி.ஆர்.சபாநாயகராக இருந்தபோது அவையை கண்ணியத்தோடு நடத்தியவர் என்றுகூறியுள்ளார்.
அதே போல தி.க. தலைவர் கி.வீரமணி, பாஜக தலைவர் ராதாகிருஷணன், முன்னாள்மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பி.டி.ஆர்.மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications