கடலில் படகு மூழ்கி 5 இலங்கை அகதிகள் பலி

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து வந்த அகதிகள் படகு கடலில் மூழ்கியதில் 5 பேர் பரிதாபமாகஇறந்தனர். 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்

இலங்கையில் போர் வெடித்துள்ள நிலையில் அங்கிருந்து தினசரி ஏராளமானதமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.

அகதிகள் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்தியக் கடற்படையும், கடலோரக்காவல் படையும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் இன்று காலை 20 பேருடன் இலங்கையிலிருந்து வந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் 5 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

மூழ்கிய படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 15 பேரை இந்தியக் கடற்படை வீரர்கள்மீட்டு ராமேஸ்வரம் கொண்டு வந்தனர்.

அவர்களிடம் உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதன் பின்னர்அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் தவிர மேலும் 29 பெண்கள், 12 குழந்தைகள் உள்ளிட்ட 71 இலங்கைத் தமிழர்களும் இன்றுஅகதிகளாக தமிழகம் வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+