பணி இறக்கத்தை எதிர்த்து சிவனாண்டி வழக்கு
சென்னை:
டிஐஜி பதவியிலிருந்து எஸ்.பியாக தன்னை பதவி இறக்கம் செய்ததை ரத்து செய்யக்கோரி சிவனாண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில், காக்கிச் சட்டை போட்ட அதிமுக தொண்டராகசெயல்பட்டு வந்தவர் சிவனாண்டி.உளவுப் பிரிவு டிஐஜியாக இருந்து வந்த அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பலரைதிருப்பியவர். கட்சிகளை உடைப்பதிலும், அதிமுகவின் வழிக்கு வராதவர்களைமிரட்டுவதிலும் ஈடுபட்டு வந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சிவனாண்டிக்கு ஆப்பு வைக்கப்பட்டது. அதற்கேற்றவகையில், மத்திய தீர்ப்ணையம் சிவனாண்டிக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கியது.
அதாவது கடந்த 1991ம் ஆண்டு (அதிமுக ஆட்சிக்கு வந்த ஆண்டு அது)தமிழகத்திலிருந்து 10 காவல்துறை அதிகாரிகள் ஐ.பி.எஸ். அந்தஸ்துக்குஉயர்த்தப்பட்டனர்.
1995ல் ஆவுடையப்பன் மற்றும் சிவனாண்டி ஆகிய இரு அதிகாரிகளும், மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலில்சேர்க்கப்பட்டனர்.
மேலும் அவர்கள் இருவருக்கு மட்டும் அதிகாரிகளுக்கான சீனியாரிட்டி பட்டியலில்முன்னுரிமை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து 5 காவல்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள மத்தியதீர்ப்ணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்ணையம், சிவானண்டி, ஆவுடையப்பன் ஆகியோரைசீனியாரிட்டி பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.
இதை சாதகமாக எடுத்துக் கொண்ட திமுக அரசு, சிவனாண்டியை டிஐஜிபதவியிலிருந்து பணி இறக்கம் செய்து, ஊர்க்காவல் படை எஸ்.பியாக அவரை மாற்றிதிருச்சிக்கு அனுப்பியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவனாண்டி பணியில் சேராமல் நீண்ட விடுப்பில்சென்றார். இப்போது அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.
அதில், ஐ.பி.எஸ். அந்தஸ்து பெறும் அதிகாரிகளுக்கான பட்டியலை திருத்தும்அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. மாநில அரசு பட்டியலைதிருத்தமுடியாது.
மீண்டும் சீனியாரிட்டி பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றுதான் மத்தியதீர்ப்ணையம் தீர்ப்பளித்துள்ளது. எங்களது ஐ.பி.எஸ். அந்தஸ்தைப் பறிக்க வேண்டும்என்று அது கூறவில்லை.
ஆனால் தமிழக அரசு ஒருபடி மேலே போய் என்னை டிஐஜி பதவியிலிருந்து பணிஇறக்கம் செய்து எஸ்.பி.யாக அறிவித்துள்ளது. இதற்கு மாநில அரசுக்கு எந்தவிதஅதிகாரம் கிடையாது.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்குஉட்பட்டதாகும். அந்த அதிகாரத்தை மாநில அரசு பறித்துக் கொண்டுள்ளது.
என்னை பணி இறக்கம் செய்ய வேண்டும் என தீர்ப்ணையம் உத்தரவு ஏதும்பிறப்பிக்காத நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை சட்டவிரோதம் ஆகும்.
எனவே தீர்ப்ணையம் பிறப்பித்த உத்தரவு, என்னை பணி இறக்கம் செய்து தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவு ஆகிய இரண்டையும் ரத்து செய்து தீர்ப்பளிக்க வேண்டும்என்று சிவனாண்டி தனது மனுவில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications