தற்கொலைகள்: டிவி நடிகைகள் அவசர கூட்டம்
டிவி நடிகைகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வருவதால் பீதிஅடைந்துள்ள சின்னத் திரை நடிகர் சங்கம், அவசரமாக கூடி ஆலோசனை நடத்தத்திட்டமிட்டுள்ளது.
சினிமா நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது நீண்ட காலமாகவே நடந்துவருகிறது. படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி என இந்தப் பட்டியல் மிகநீளமானது.
ஆனால் சமீப காலமாக டிவி தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் தொடர்ந்துதற்கொலை செய்து கொண்டு வருவது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சாருகேஷ், நடிகைகள் ஷாலினி, வைஷ்ணவி, சமீபத்தில் ஷ்ரத்தா என இந்தவரிசை நீண்டு கொண்டே வருகிறது.
இதனால் அதிர்ந்து போயுள்ள சின்னத்திரை நடிகர், நடிகைகள் சங்கம்,உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி இதுதொடர்பாக ஆலோசிக்க உள்ளது.
சங்க செயலாளர் வாத்தியார் ராமன் (தண்ணீர் தண்ணீர் படத்தில் ஆசிரியராகநடித்தவர்) இதுகுறித்துக் கூறுகையில்,
வைஷ்ணவி இறந்ததுமே நடிகைகளுக்கு கவுன்சிலிங் தர முடிவு செய்து கூட்டம்போட்டோம். ஆனால் பாதிக்கும் மேற்பட்ட நடிகைகள் வரவில்லை. இப்படிஇருந்தால் எப்படி கவுன்சிலிங் கொடுக்க முடியும், கூட்டம் போட முடியும்?
ஒரு நடிகை சந்தோஷமாக இருக்கிறாரா, துக்கத்தில் இருக்கிறாரா, பிரச்சினையில்இருக்கிறாரா என்பதை தனிப்பட்ட முறையில் ஊடுறுவி பார்க்க முடியாது.அவராகவே வந்து சொன்னால்தான் தெரியும்.
அப்படிப்பட்ட நடிகைகள் எங்களை அணுகி கவுன்சிலிங் பெறலாம், அதற்கு ஏற்பாடுசெய்து கொடுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
தீர்க்க முடியாத பிரச்சினை என்று ஒன்றுமே இல்லை. அப்படி எங்களை அணுகினால்எங்களால் முடிந்த அளவுக்கு அந்தப் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்வோம்,உதவுவோம்.
இதுதொடர்பாக விரைவில் சங்கக் கூட்டத்தைக் கூட்டவுள்ளோம். இதில் அனைத்துநடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.பிரச்சினைகளை விட உயிர் முக்கியமானது, மேலானது, அதற்கு ஈடு எதுவும் இல்லைஎன்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ராமன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications