கேப்டன் விருத்தாச்சலம் பயணம்-தடுக்க போலீஸ் முயற்சி?
சென்னை:
நடிகர் விஜயகாந்த், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதிக்குவரும் 22ம் தேதி சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
தமிழகம் முழுவதும் போட்டியிட்டு விருத்தாச்சலத்தில் மட்டும் வெற்றி பெற்றதுவிஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம். விருத்தாச்சலம் தொகுதியில்விஜயகாந்த் அபார வெற்றி பெற்று வன்னியர் கோட்டைக்குள் நுழைந்து சாதனைபடைத்துள்ளார்.இந் நிலையில் தன்னைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக22ம் தேதி விருத்தாச்சலம் செல்கிறார் விஜயகாந்த். அவருடன் மனைவிபிரேமலதாவும் உடன் செல்கிறார்.
அன்று மாலை வானொலி திடலில் நடக்கும் கூட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றிதெரிவித்துப் பேசுகிறார் விஜயகாந்த்.
பாஜக புகார்:
இதற்கிடையே விருத்தாச்சலம் தொகுதியில் டென்ஷன் நிலவி வருவதால்இப்போதைக்கு தொகுதிப் பக்கம் வர வேண்டாம் என்று விஜய்காந்தை காவல்துறைஎச்சரித்திருப்பதாக பாஜக புகார் கூறியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
திமுக ஆட்சிக்கு வந்தால் பின்னாலேயே சட்டம் ஒழுங்கும் சீர் குலைந்து விடும்.கடந்த காலங்களில் இதைப் பார்த்திருக்கிறோம். இப்போதும் அந்த பழைய கலாச்சாரம்வந்து விட்டதோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி கூற விஜயகாந்த்அங்கு செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால் அவரைத் தொடர்பு கொண்டகாவல்துறை உயர் அதிகாரிகள், இப்போது விருத்தாச்சலம் டென்ஷனாக இருக்கிறது.எனவே நீங்கள் அமைதி காக்க வேண்டும். தொகுதிப் பக்கம் வர வேண்டாம் என்றுஎச்சரித்துள்ளனர்.
காவல்துறையினரின் இந்தச் செயல் சரியல்ல. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போகஆரம்பித்துள்ளதையே இது காட்டுகிறது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று திமுக அரசு அறிவித்திருப்பதைவரவேற்கிறோம். அதேபோல, விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடன் தள்ளுபடிசெய்யப்பட்டிருப்பதையும் வரவேற்கிறோம்.
சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. மக்கள் தீர்ப்பை நாங்கள்வரவேற்கிறோம்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோருவதுநியாயமானதுதான்.
அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லை என்றால் அவர்கள் கட்சியைஅறிவாலயத்தில் அடமானம் வைத்து விட்டார்கள் என்று தான் அர்த்தம் அல்லதுகாங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்கிறது என்று அர்த்தம்.
ஏதோ சிறிதளவாவது தன்மானம் மிஞ்சியிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும்வகையில் காங்கிரஸார் ஆட்சியில் பங்கு கேட்டிருப்பதை நான் வரவேற்கிறேன்என்றார் ராதாகிருஷ்ணன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications