திமுக-காங் கூட்டணியை உடைக்க அதிமுக முயற்சி: தயாநிதி மாறன்
சென்னை:
திமுக, காங்கிரஸ் இடையே குழப்பம் ஏற்படுத்தி, கூட்டணியை உடைக்க அதிமுகமுயற்சித்து வருவதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 15வது நினைவு தினத்தையொட்டி இன்று வடசென்னை இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. முகாமைதயாநிதி தொடங்கி வைத்தார்.அதில் தயாநிதி பேசுகையில், தமிழகத்தில் திமுக தலைமையில் நல்லாட்சி நடந்துவருகிறது. இந்த ஆட்சிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருந்து வருகிறது. இதுதொடரும். இதேபோல புதுவையிலும் காங்கிரஸ் அரசுக்கு திமுக உறுதுணையாகஇருக்கிறது.
இந்தக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி, பிளவு ஏற்படுத்த ஆட்சியை இழந்தவர்கள்மயற்சித்து வருகிறார்கள். ஆனால் அது தோல்வியில்தான் முடியும். இந்தக் கூட்டணிஉடையாது.
இன்னும் 6 மாதங்களில் நடைபெறப் போகும் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தவெற்றிக் கூட்டணி தொடரும் என்றார் தயாநிதி மாறன்.
முன்னதாக ராஜீவ் காந்தி 15 ஆண்டுகளுக்கு முன்பு மனித வெடிகுண்டால்கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டல்அல்போன்ஸ், தங்கபாலு உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில்ராஜீவ் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர்கள்டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர்மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications