ஜூன் 3ம் தேதி முதல் 2 ரூபாய் அரிசி
சென்னை:
தமிழக அரசின் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம் முதல்வர்கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தபடி 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசிவழங்கும் திட்டத்தை அரசு அமலாக்குகிறது.இதற்கான விழா தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறைஅமைச்சர் ஏ.வ. வேலு தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணியும் கலந்து கொண்டார்.
அதில் ரேஷன் கடைகளில் ஒரு மாதத்திற்குரிய அரிசியை 5 கிலோ, 10 கிலோ, 15கிலோ, 20 கிலோ என பொதுமக்கள் தங்களது வசதிக்கேற்ப நான்கு விதமாக பெற்றுக்கொள்ளலாம்.
இதுதொடர்பான தெளிவான விளக்க விளம்பரத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும்வைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.
ஜூன் 3ம் தேதி சென்னையில் விழாவுக்கு ஏற்பாடு செய்து அன்றைய தினம் 2ரூபாய்க்கு 1 கிலோ அரிசித் திட்டத்தைத் தொடங்கவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. அன்றைய தினம் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் அமைச்சர்கள் 2 ரூபாய் அரிசி வழங்கும் திட்டத்தைதொடங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, கூட்டுறவுக் கடன் தள்ளுபடி குறித்த முதல்வரின் அறிவிப்பைசெயல்படுத்தும் வகையில், பயன் பெறும் விவசாயப் பயனாளிகளுக்கு பயிர்க் கடன்தள்ளுபடி தொகை குறித்த அனைத்து புள்ளி விவரங்களுடன், தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலாளர்கள், ஒவ்வொரு பயனாளிகளுக்கும்தெரிவிக்க வேண்டும் என்றும்,
மேலும் இதுகுறித்து பயனாளிகள் அறியும் வகையில், தக்க விளம்பரப் பணிமேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் இருவரும்உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications