நாளை சட்டசபை கூடுகிறது-மீண்டும் தமிழில் கவர்னர் உரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்து, புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில்சில நாட்களுக்கு முன்பு புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாளை (புதன்கிழமை) சட்டசபை ஆளுநர் உரையுடன்தொடங்குகிறது. புதிய அரசின் முதல் சட்டசபைத் தொடர் என்பதால் மரப்புப்படிஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது.

ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்திய பின்னர் ஆங்கில உரையின் தமிழாக்கத்தைசபாநாயகர் ஆவுடையப்பன் வாசிப்பார். ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்தில் கவர்னர் உரையைதமிழில் படிப்பது நிறுத்தப்பட்டகு குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் உரையில் ஏழைகளுக்கு இலவச கலர் டிவி, ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவது ஆகியவை குறித்தஅறிவிப்புகள் இருக்கும் என்று தெரிகிறது.

ஆளுநர் உரைக்குப் பின் சட்டசபை ஒத்திவைக்கப்படும். அதன் பின்னர் அலுவல்ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்ற முடிவைஎடுக்கும்.

நாளை மறுநாள் சபை மீண்டும் கூடும்போது மறைந்த அமைச்சர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அன்றைய தினம் சபைஒத்திவைக்கப்படும்.

பின்னர் சபை மீண்டும் கூடும்போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீது விவாதம் நடைபெறும்.

நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்:

சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்கூட்டப்பட்டுள்ளது.

நாளை மாலை முதல்வர் கருணாநிதி தலைமையில் இக் கூட்டம் நடக்கும் என தமிழகஅரசின் தலைமைக் கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+