30ம் தேதிக்குள் உழவர் சந்தைகள் புதுப்பிப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தமிழகம் முழுவதும் உள்ள 100 உழவர் சந்தைகளும் வருகிற 30ம் தேதிக்குள்புதுப்பிக்கப்பட்டு மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று வேளாண்துறை அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
சேலம் சூரமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்இன்று சுற்றிப் பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உண்மையான வியாபாரிகள்தானா என்றுவிசாரணை நடத்தினார். எடைக் கற்களையும் சோதித்துப் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற 30ம் தேதிக்குள் மாநிலம்முழுவதும் உள்ள 100 உழவர் சந்தைகளும் புதுப்பிக்கப்பட்டு விடும். புதியபொலிவுடன் ஜூன் 1ம் தேதி முதல் உழவர் சந்தைகள் செயல்படும்.
உழவர் சந்தைகளில் வியாபாரத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அடையாள அட்டைவழங்கப்படும். போலி வியாபாரிகள் வெளியேற்றப்படுவர் என்றார்.












Click it and Unblock the Notifications