கூடுதல் நிதியுதவி கோரி பிரதமருக்கு அரசு கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக அளவில் நிதியுதவி அளிக்கக் கோரி பிரதமர்மன்மோகன் சிங்குக்கு திமுக அரசு வரைவுத் திட்டம் ஒன்றை அனுப்பிவைத்திருப்பதாகத் தெரிகிறது. இதை பிரதமர் மன்மோகன்சிங்கேஉறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ்ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர். அங்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து சுதர்சனம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், மரியாதைநிமித்தமாக பிரதமரையும், காங்கிரஸ் தலைவரையும் சந்தித்தேன். அப்போது தமிழகஆட்சியில் பங்கு கேட்பது குறித்து இரு தலைவர்களிடமும் நான் விவாதிக்கவில்லை.

பிரதமரை சந்தித்தபோது, திமுக அரசு அதிக அளவில் நிதி கேட்டு ஒரு திட்டத்தைதனக்கு அனுப்பி வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாகவும், தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதியுதவிகளை மத்திய அரசு கண்டிப்பாகசெய்யும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

மேலும், தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவும் பிரதமர் ஒப்புக் கொண்டுஉறுதியளித்துள்ளார் என்றார் சுதர்சனம்.

2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல்வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற ஆரம்பித்திருக்கும் நிலையில் அதிகஅளவில் நிதி கோரி பிரதமருக்கு தமிழக அரசு வரைவுத் திட்டத்தை அனுப்பியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தமிழக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து இன்னும் இறுதி முடிவுஎடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 2 ஆண்டு கால ஆட்சி நேற்றுடன் முடிந்து3வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின்செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்க முடிவுசெய்யப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சிங்வி அளித்தபதில்:

தமிழக ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று கோரி மாநில காங்கிரஸ்எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ்மேலிடம் இதுதொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை.

திமுக அரசுக்கு வெளியிலிருந்துதான் தற்போது நாங்கள் ஆதரவளித்து வருகிறோம்.

கட்சி மேலிடத்தின் அனுமதி இல்லாமல் எந்த முடிவும் மாநில அளவில் எடுக்கப்படமாட்டாது. இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் வெளிப்படையாகத்தெரிவிக்கப்படும் என்றார் சிங்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+