இழந்தது இரு கைககள்; இழக்காதது நம்பிக்கை
சென்னை:
இரு கைகளையும் இழந்த நிலையிலும் கூட செயற்கைக் கரங்களைப் பொருத்திக்கொண்டு, பிளஸ் டூவில் 1,137 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும்அசத்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த மாளவிகா.
சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன், ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நான்குவருடங்களுக்கு முன்பு அம்மாநில குடிநீர் வாரியத் துறையில் செயற் பொறியாளராகவேலை பார்த்து வந்தார். இதனால் கிருஷ்ணனின் குடும்பம் அங்கேயேகுடியேறியிருந்தது.
அப்போது ஒரு வெடிவிபத்தில் கிருஷ்ணனின் மகள் மாளவிகாவின் இரு கைகளும்துண்டிக்கப்பட்டன. இதனால் குடும்பமே மனம் உடைந்தது. இருந்தாலும் கிருஷ்ணன்அத்தோடு நின்று விடாமல் தனது மகளுக்கு செயற்கைக் கரங்களைப் பொருத்தஏற்பாடு செய்தார்.
செயற்கைக் கரங்கள் பொருத்தப்பட்ட பின்னர் மாளவிகா தனது தாயார்ஹேமமாலினியுடன் சென்னைக்கு வந்தார். இங்கு தனியார் டுடோரியல் கல்லூரியில்சேர்ந்து பத்தாவது வகுப்பு படித்தார்.
![]() |
அவரால் தேர்வு எழுத முடியாது என்பதால் அவருக்காக ஒருவர் பரீட்சை எழுதினார்.கைகளை இழந்து செயற்கைக் கரங்களுடன் இருந்தபோதிலும் மன தைரியத்தையும்,நம்பிக்கையையும் விடாத மாளவிகா சிறப்பாக படித்து பத்தாவது வகுப்பில் முத்திரைபதித்தார்.
அத்துடன் முடிந்து விடவில்லை மாளவிகாவின் முயற்சிகள். தொடர்ந்து பள்ளியில்படித்து பிளஸ்டூவை முடிக்க விரும்பிய அவர் அண்ணா நகரில் உள்ள அண்ணாஆதர்ஷ் பள்ளியில் சேர்ந்து படித்தார்.
அவரது தன்னம்பிக்கையைப் பார்த்த பள்ளி நிர்வாகம் அவருக்கு முழு ஆதரவுகொடுத்து அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது.
அவருக்காக சில சிறப்பு வசதிகளையும் பள்ளி நிர்வாகம் செய்து கொடுத்தது. நடனம்,நீச்சல் என வேறு எதிலும் ஈடுபட முடியாவிட்டாலும் கூட மனம் தளராமல் படிப்பு,படிப்பு என கருமமே கண்ணாக இருந்தார் மாளவிகா.
விபத்துக்கு முன்பு 85 சதவீத மதிப்பெண்களையே பெற்று வந்த மாளவிகா அதன்பின்னர் அதில் முன்னேற்றம் கண்டு 95 சதவீத மதிப்பெண்களைப் பெற்று வந்தார்.
பிளஸ் டூ தேர்வை உதவியாளர் துணையுடன் எழுதிய மாளவிகா, பிசினஸ் மேத்ஸ்பரீட்சையை மட்டும் தனது செயற்கைக் கையால் ஜெர்மனி நாட்டு அதிநவீனதொழில்நுட்ப உதவியின் மூலம் தானே எழுதி சாதனை படைத்துள்ளார்.
இப்படி கஷ்டப்பட்டு படித்து தேர்வை சந்தித்த மாளவிகா பிளஸ் டூவில் பெற்றுள்ளமதிப்பெண்கள் 1,137.
இந்த மதிப்பெண்களால் மாளவிகாவுக்குத் திருப்தி இல்லையாம். உண்மையில் நான்97 சதவீத மதிப்பெண்களை எதிர்பார்த்தேன். ஆனால் மதிப்பெண் குறைந்துள்ளதுஎனக்கு வருத்தமாக உள்ளது. பொருளாதார தாளில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கதிட்டமிட்டுள்ளேன் என்று கூறுகிறார் மாளவிகா.ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவதுதான் மாளவிகாவின் லட்சியம். அந்த லட்சியத்தை அடையஎனக்கு எனது கைகளோ, எனது இயலாமையோ ஒரு தடையே அல்ல, என்னால்சாதிக்க முடியும், அதை நான் தொடர்ந்து நிரூபித்து வருகிறேன். இனியும் எனதுதன்னம்பிக்கையால் சாதித்துக் காட்டுவேன் என்கிறார் மாளவிகா.
இரு கைகளையும் இழந்தாலும் நம்பிக்கையை வைத்துக் கொண்டே சர்வ சாதாரணமாகசாதனைகளைப் புரியும் மாளவிகா அத்தனை பேருக்கும் உதாரண புருஷியாகஇருக்கிறார்.













Click it and Unblock the Notifications