ஒரே நாளில் 234 இலங்கை அகதிகள் வருகை!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் மட்டும் 234 இலங்கைத் தமிழர்கள்அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் வலுத்துவருவதால் தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டுள்ளனர். சமீபநாட்களாக நூற்றுக்கணக்கானோர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை இந்த ஆண்டு மட்டும் 1,200 அகதிகள்தமிழகம் வந்துள்ளனர். இந் நிலையில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில்மட்டும் 234 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர்.
அரிச்சமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர்கள் வந்திறங்கினர். போலீஸ்விசாரணைக்குப் பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications