1,003 மதிப்பெண் அள்ளிய ஹோட்டல் ஊழியர்
கோவை
ஹோட்டலில் வேலை பார்க்கும் பிளஸ்டூ படித்த மாணவர் 1,003 மதிப்பெண்கள்எடுத்துள்ளார்.
மேல்படிப்புக்காக நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்துள்ளார் இந்த லட்சிய மாணவர்.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது தந்தைகந்தசாமி. தாயார் சரோஜா. கந்தசாமி நெல்லையில் உள்ள ஹோட்டலில் வேலைபார்த்து வருகிறார். மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த குமார் நன்கு படிக்கக்கூடியவர்.
அம்பசாமுத்திரத்தில் உள்ள தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்த குமார்தேர்வில் வென்று 1,003 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால், குடும்ப கஷ்ட நிலையை உணர்ந்த குமார்,தேர்வை முடித்து விட்டு கோவைக்கு வந்தார். டவுன்ஹால் பகுதியில் உள்ளபிரபலமான அன்னபூர்ணா ஹோட்டலில் இலை, தட்டு எடுக்கும் ஊழியராகவேலைக்கு சேர்ந்தார்.
பிளஸ்டூ முடிவுகளைப் பார்த்தபோது, தான் 1,003 மதிப்பெண்கள் பெற்றுதேறியிருப்பதை அறிந்து சந்தோஷமடைந்தார். ஆனால் அந்த சந்தோஷம் நீண்டநேரம் நீடிக்கவில்லை. அடுத்து படிக்க பணம் இல்லையே என்ற வருத்தம் அந்தமாணவனின் மனதை வாட்டியது.
கடந்த 2 மாதமாக ஹோட்டலில் வேலை பார்த்து வரும் குமார், இதன் மூலம்கிடைக்கும் சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்து வருகிறார். தொடர்ந்து படிக்கயாராவது நிதியுதவி செய்தால்தான் முடியும் என்ற நிலையில் உள்ளார்.
தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கும் குமார், அது முடியாவிட்டால்தந்தை வழியில் ஹோட்டல் ஊழியராக தன்னை சுருக்கிக் கொள்ளவும் தயாராகஇருக்கிறார்.
குமார் பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ் - 166, ஆங்கிலம் - 113, அக்கவுண்டன்சி -195, தணிக்கையியல் - 194, வர்த்தகம் - 183, கருத்தியல் - 152.
உதவ நினைப்போர்...
குமாருக்கு உதவ நினைப்போர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
கே.குமார்,
தகப்பனார் பெயர்: கந்தசாமி,
16, அம்மன் சன்னதி தெரு,
ஊர்க்காடு,
அம்பாசமுத்திரம்,
திருநெல்வேலி மாவட்டம்
பின்கோட்- 627401
மாணவன் படித்த பள்ளியின் பெயர் தீர்த்தகிரி மேல்நிலைப்பள்ளி
அதன் தொலைபேசி எண்: 04634-250946
தலைமை ஆசிரியர் பெயர்: சிவசைலம்












Click it and Unblock the Notifications