விருத்தாச்சலத்தில் விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

விருத்தாச்சலம்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதிக்குமுதன் முறையாக விஜயம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சட்டசபைத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவிஜயகாந்த் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அங்கு சென்றார்.

அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் சென்றார். சென்னையிலிருந்துவிருத்தாச்சலம் வந்த அவர் முதலில் அங்கு தான் அமைத்துள்ள எம்.எல்.ஏ.அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனைநடத்தினார்.

இதையடுத்து அரசு ஆடவர் மேல் நிலைப்பள்ளிக்குச் சென்றார். பள்ளிக் கட்டடம்மோசமாக இருப்பதைப் பார்வையிட்ட விஜயகாந்த், புதிய கட்டடம் கட்டுவதற்குத்தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

அதன்பின்னர் தாலுகா அளவிலான அதிகாரிகள் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார்.இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) ஜான் லூயிஸ் கலந்து கொண்டுஅதிகாரிகளை விஜயகாந்த்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அவர்களிடையே விஜயகாந்த் பேசுகையில், மக்களுக்காக நான் சேவை செய்யதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். மக்கள் குறைகளை உங்களிடம் தெரிவித்தால்அதுதொடர்பாக ஆவண செய்து எனக்கு ஒத்துழையுங்கள்.

பணம் சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை, மக்களுக்கு சேவைசெய்வது மட்டுமே எனது லட்சியம். அந்த லட்சியத்தில் அரசு அதிகாரிகளானஉங்களின் ஒத்துழைப்பும் எனக்கு அவசியம் தேவை என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் கம்மாபுரம் கிராமத்திற்கு விஜயகாந்த் சென்றார். சமீபத்தில் அங்கு தீவிபத்துஏற்பட்டு பல குடிசைகள் சேதமடைந்தன. அந்தப் பகுதி மக்களுக்கு விஜயகாந்த்ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் ஆலடி ரோடு, எம்.ஆர்.கே. நகர், பெரியார் நகர், வயலூர் உள்ளிட்ட பலபகுதிகளுக்கு விஜயகாந்த் சென்று தொகுதி மக்களை சந்தித்தார்.

அதன் பின்னர் வானொலி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பெரும் திரளாககூடியிருந்த மக்களிடையே விஜயகாந்த் பேசினார்.

வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அப்போதுவிஜயகாந்த் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், மக்கள் பிரச்சினைக்காக நான்முதல்வர் கருணாநிதி உள்பட யாரையும் எப்போதும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

மக்கள்தான் எனக்கு முக்கியம். அதற்காக யாரையும் நான் சந்திப்பேன். எனக்கு எந்தஈகோவும் கிடையாது.

மக்கள் நல்ல மாற்றத்தை விரும்பித்தான் எனக்கும், எனது கட்சிக்கும்வாக்களித்துள்ளனர். அந்த மக்களை நான் ஏமாற்ற மாட்டேன் என்றார்.

விஜயகாந்த் வருகையையொட்டி எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படாத வகையில்போலீஸார் பலத்த பாதுகாப்பு கொடுத்திருந்தனர்.

பாதுகாப்பு கருதி சில பகுதிகளுக்கு விஜயகாந்த் செல்ல வேண்டாம் என்று ஏற்கனவேபோலீஸார் அறிவுறுத்தியிருந்ததால் அங்கு விஜயகாந்த் செல்லவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+