ஜெ. சட்டசபைக்குப் போக வேண்டும்: திருமா
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சட்டசபைக் கூட்டங்களில் கண்டிப்பாககலந்து கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பலம் வாய்ந்த எதிர்க்கட்சிவரிசை முதல் முறையாக சட்டசபையில் அமைந்துள்ளது. எனவே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பொறுப்பு மிக மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.பலமான எதிர்க்கட்சியின் தலைவர் என்பதால் ஜெயலலிதா மீதான மக்களின்எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
சட்டசபைக்கு வர மாட்டேன் என்று அவர் கூறக் கூடாது. அப்படிச் செய்தால் முன்புகருணாநிதி செய்ததை பின்பற்றுவது போலாகி விடும்.
இந்தத் தேர்தலில் அதிமுக தோல்வி அடையவும் இல்லை, திமுக திருப்திகரமானவெற்றியையும் பெற்று விடவில்லை. மிகப் பெரிய கூட்டணியைக் கொண்டும் கூடதிமுகவால் தனிப்பெரும்பான்மை பலத்தைப் பெற முடியவில்லை என்பதை கணக்கில்கொள்ள வேண்டும்.
திமுக கோட்டை என்று கூறப்பட்டு வந்த சென்னையில் 7 தொகுதிகளை அதிமுககைப்பற்றியுள்ளது. இதன் முலம் திமுகவின் காட்டை என்ற மாயை அகன்றுள்ளது.
சென்னை மக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக சரியான முடிவைத் தந்துள்ளார்கள்.
திமுக தன்னைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களையும், தனது கூட்டணிக் கட்சிகளையும்ஏமாற்றி துரோகம் செய்து வருகிறது. கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றுதான்திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஆனால் அதற்கு முரணாக தனிகட்சி ஆட்சியை அமைத்துள்ளது திமுக. கூட்டணிக்கட்சியினரை அமைச்சரவையில் சேர்க்க மறுத்து வருகிறது.
கூட்டணி ஆட்சி அமைவதற்குத் தேவையான முயற்சிகளை பாமக மற்றும் காங்கிரஸ்கட்சிகள் எடுக்க வேண்டும்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாகலாம் என்ற திமுக அரசின் உத்தரவைவிடுதலைச் சிறுத்தைகள் பாராட்டி வரவேற்கிறது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைப்பதற்குத் தேவையான வாக்குகளைஇத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் பெறவில்லை. அதிமுகவுடன் எங்களதுகூட்டணி தொடரும் என்றார் திருமாவளவன்.
முன்னதாக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைஎம்.எல்.ஏக்கள் ரவிக்குமார் மற்றும் செல்வம் ஆகியோருடன் திருமாவளவன்ஜெயலலிதாவை அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆசி பெற வைத்தார்.
அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தமற்ற 7 வேட்பாளர்களும் சென்று ஜெயலலிதாவை சந்தித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications