கருணாநிதி இருந்த இடம் ஜெயலலிதாவுக்கு..!
சென்னை:
சட்டமன்றத்தில் கட்சிகள் அடிப்படையில் எம்எல்ஏக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட அதே இருக்கையைஇப்போது ஜெயலலலிதாவுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதிக்கு எதிர்க் கட்சி வரிசையில் இரண்டாவது வரிசையில் தான் இடம்ஒதுக்கப்பட்டது. எதிர்க் கட்சி பகுதியில் முதல் வரிசையில் அவருக்கு சீட் தரப்படவில்லை.
கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்ட சீட்டின் வரிசை எண் 220 ஆகும். இப்போது அதே இடம் ஜெயலலிதாவுக்குஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு முன் வரிசையில் சீட் ஒதுக்கப்படவில்லை. ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் அவரதுதோழியும் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான பதர் சயீதுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சுயேச்சை உறுப்பினரான ராஜேந்திரனுக்கு திமுக வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
போன முறை கருணாநிதி அவைக்கு வரவில்லை. இம்முறை ஜெயலலிதாவும் வரப் போவதில்லை. இதனால் சீட்நம்பர் 220 இன்னும் 5 வருடத்துக்கு வேகண்டாகவே இருக்கப் போகிறது.
ஜெவுக்கு உரிய பாதுகாப்பு-கருணாநிதி
இதற்கிடையே நான் முன்னாள் முதல்வராக இருந்தபோது எனக்கு என்ன பாதுகாப்புகொடுக்கப்பட்டதோ, அதே பாதுகாப்புதான் இப்போது ஜெயலலிதாவுக்குவழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடந்தது.இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநதி பேசுகையில்,
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுவது தவறானசெய்தி. அவர் இசட் பிளஸ் வகை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர். அந்தப் பிரிவைச்சேர்ந்தவருக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டுமோ அதைத்தான்கொடுத்திருக்கிறார்கள்.
நான் கூட இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புக்கு உட்பட்டவன்தான். எனக்கு கடந்த காலஅதிமுக ஆட்சியில் என்ன பாதுகாப்பு தரப்பட்டதோ, அதே அளவிலானபாதுகாப்புதான் தற்போது ஜெயலலிதாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
வைகோ தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக பிரதமரிடம் புகார் கூறியிருக்கிறார்.பிரதமர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பார்ப்போம்.
முதலில் கலர் டிவி தருவதாக கூறியுள்ளோம். அதை முதலில் கொடுப்போம். காஸ்அடுப்பு உள்ளிட்டவை குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும், அடுத்தடுத்துஒவ்வொன்றாக கொடுப்போம்.
லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி தர வேண்டும் என்றுகோரியுள்ளார்கள். அதுகுறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளேன். இன்னும் முடிவுஎடுக்கப்படவில்லை.
பெண்களை அர்ச்சர்களாக நியமிக்க வேண்டும் என்று உமாபாரதி கூறியுள்ளதுமுற்போக்கான கருத்து.
திமுகவில் பலர் புதுமுக எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அவர்களுக்கு இன்றையகூட்டத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி கொடுத்தோம்.
சட்டசபையில் முதல் நாளே அதிமுக வெளிநடப்புச் செய்திருப்பது குறித்து எனக்குஎந்தக் கருத்தும் இல்லை. ஜனநாயகத்தில் இவையெல்லாம் அனுமதிக்கப்படக்கூடியவைதான் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications