ஜெவுக்கு முன்னாள் முதல்வருக்குரிய பாதுகாப்பு: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நான் முன்னாள் முதல்வராக இருந்தபோது எனக்கு என்ன பாதுகாப்புகொடுக்கப்பட்டதோ, அதே பாதுகாப்புதான் இப்போது ஜெயலலிதாவுக்குவழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடந்தது.இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநதி பேசுகையில்,

ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுவது தவறானசெய்தி. அவர் இசட் பிளஸ் வகை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர். அந்தப் பிரிவைச்சேர்ந்தவருக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டுமோ அதைத்தான்கொடுத்திருக்கிறார்கள்.

நான் கூட இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புக்கு உட்பட்டவன்தான். எனக்கு கடந்த காலஅதிமுக ஆட்சியில் என்ன பாதுகாப்பு தரப்பட்டதோ, அதே அளவிலானபாதுகாப்புதான் தற்போது ஜெயலலிதாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

வைகோ தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக பிரதமரிடம் புகார் கூறியிருக்கிறார்.பிரதமர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பார்ப்போம்.

முதலில் கலர் டிவி தருவதாக கூறியுள்ளோம். அதை முதலில் கொடுப்போம். காஸ்அடுப்பு உள்ளிட்டவை குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும், அடுத்தடுத்துஒவ்வொன்றாக கொடுப்போம்.

லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி தர வேண்டும் என்றுகோரியுள்ளார்கள். அதுகுறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளேன். இன்னும் முடிவுஎடுக்கப்படவில்லை.

பெண்களை அர்ச்சர்களாக நியமிக்க வேண்டும் என்று உமாபாரதி கூறியுள்ளதுமுற்போக்கான கருத்து.

திமுகவில் பலர் புதுமுக எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அவர்களுக்கு இன்றையகூட்டத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி கொடுத்தோம்.

சட்டசபையில் முதல் நாளே அதிமுக வெளிநடப்புச் செய்திருப்பது குறித்து எனக்குஎந்தக் கருத்தும் இல்லை. ஜனநாயகத்தில் இவையெல்லாம் அனுமதிக்கப்படக்கூடியவைதான் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+