நாடாளுமன்றம்-அதிமுக கிளப்பிய இட்லி பிரச்சனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இட்லியை மையமாக வைத்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்பிது அதிமுக.
நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தனது பட்ஜெட் உரையில், ரெடிமேட் இட்லி மாவுக்கு வரிகுறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.இதுதொடர்பாக ராஜ்யசபாவில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது அதிமுகஉறுப்பினர் பி.ஜி.நாராயணன் பேசுகையில், ரெடிமேட் இட்லி மாவுக்கு வரிகுறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அறிவித்தும் கூடபொதுமக்களுக்கு அது எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் இல்லை.
இன்னும் விலை அதிகமாகவே உள்ளது. இதேபோல இட்லியை தயாரிக்கபயன்படுத்தப்படும் உளுந்தம் பருப்பு மற்றும் இட்லியுடன் தொட்டுக் கொள்ளப்பயன்படும் பொடிக்குத் தேவையான நல்லெண்ணை ஆகியவற்றின் விலையும்அதிகமாகவே உள்ளது.
இட்லி சாப்பிடக் கூடிய மாநிலத்திலிருந்து வந்தவரான மத்திய நிதி அமைச்சர் இதற்குஎன்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆவேசமாக கேட்டார் நாராயணன்.












Click it and Unblock the Notifications