ஒரே நாளில் 120 ரவுடிகள் சுற்றி வளைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் ஒரே நாளில் 120 ரவுடிகளை போலீஸார் வளைத்துப் பிடித்து கைதுசெய்துள்ளனர்.

சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மாநகர காவல்துறை பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு வழக்குகளில்தொடர்புடைய பழைய ரவுடிகளை களையெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பல்வேறு தனிப்படைகளை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண்அமைத்தார்.

இந்த தனிப்படையினர் நகர் முழுவதும் சல்லடை போட்டு பழைய ரவுடிகளை தேடிப்பிடித்து கைது செய்தனர். இப்படி ஒரே நாளில் மட்டும் 120 ரவுடிகளை போலீஸார்வளைத்துப் பிடித்து உள்ளே தள்ளியுள்ளனர்.

சென்னை நகரில் ரவுடிகள் அட்டகாசம் தலை தூக்கக் கூடாது என்று லத்திகா சரணுக்குமுதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, மாமூல் கேட்பவர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள், ஆள் வைத்துஅடிப்பவர்கள் என எந்தவிதமான சட்டவிரோத செயலில் யார் ஈடுபட்டாலும்அதுதொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக அந்த நபர்களை கைது செய்யவேண்டும் என்று மாநகர போலீஸாருக்கு லத்திகா சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+