சரத் எம்பி பதவியை பறிக்க திமுக கோரிக்கை
டெல்லி:
திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்ட நடிகர் சரத்குமாரின் எம்.பி.பதவியை பறிக்கக் கோரி ராஜ்யசபா தலைவர் பைரான் சிங் ஷெகாவத்துக்கு திமுககோரிக்கை விடுத்துள்ளது.
திமுகவில் இருந்து வந்த சரத்குமார் அக்கட்சியின் சார்பில் கடந்த 2001ம் ஆண்டுஜூலை மாதம் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.சமீபத்தில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அவர் திமுகவிலிருந்து விலகிஅதிமுகவில் இணைந்தார். ஆனால், தனது எம்பி பதவியை முறைப்படி ராஜினாமாசெய்யவில்லை.
தனது பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியசரத்குமார், அதைச் செய்யவில்லை. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமானால்ராஜ்யசபா தலைவரிடம் கடிதம் தர வேண்டும்.
ஆனால், பதவியை ராஜினாமா செய்தது மாதிரி நாடகம் ஆடினார் சரத்.
இந் நிலையில் சரத்குமாரின் எம்.பி பதவியை கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பறிக்கவேண்டும் என்று கோரி ஷெகாவத்துக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில், திமுக சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரத்குமார். அவர்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து விட்டார். ஆனால் எம்.பி. பதவியைராஜினாமா செய்யவில்லை.
எனவே கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் சரத்குமாரின் எம்.பி. பதவியை பறிக்கவேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
இதையடுத்து சரத்குமாரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப ஷெகாவத் முடிவுசெய்துள்ளார்.
சரத்குமார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் ஜூன்மாதம் இரண்டாவது வாரத்தில், நேரில் வந்து ஷெகாவத்தை சந்தித்து விளக்கம்அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவார் என ராஜ்யசபா வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications