சிவாஜிக்கு சிலை-திரையுலகம் நன்றி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மெரினா கடற்கரையில் சிலை வைக்கப்படும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை,சிவாஜி குடும்பத்தினர் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையில், சென்னை மெரினா கடற்கரையில், சிவாஜிகணேசனுக்கு முழு உருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர்கே.சி.என்.சந்திரசேகர் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சிவாஜிகணேசனுக்கு சிலை வைக்கப்படும் என்ற அறிவிப்பு, திரையுலகம் மீதும், தமிழ் படஉலகம் மீதும் தங்களுக்கு உள்ள நெருக்கத்தையும், நல்லெண்ணத்தையும் காட்டுகிறதுஎன்று கூறியுள்ளார்.
இதேபோல சிவாஜி கணேசன் குடும்பத்தினர், சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம்ஆகியோரும் முதல்வருக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications