கூட்டாக சேர்ந்து தாக்கினர்: செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அதிமுகஎம்.எல்.ஏக்களைத் தாக்கியதாக அதிமுக துணைத் தலைவர் செங்கோட்டையன்கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று நடந்த அமளிக்குப் பின்னர் அதிக உறுப்பினர்கள் அனைவரும்அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவையிலிருந்து வெளியேறிய பின்னர் நுழைவாயிலில் நின்றபடி அதிமுகஎம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர்.

பின்னர் அவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போதுசெங்கோட்டையன் பேசுகையில்,

திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் திட்டமிட்டு எங்களைத் தாக்கினர்.அதிமுகவினர் யாரும் அவைக்கு வரக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள்எங்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

முதல்வரை நாங்கள் யாரும் அடிக்க முயலவில்லை. திமுகவினர்தான் எங்களைநோக்கி பாய்ந்து வந்து தாக்கினர். அவர்களுடன் காங்கிரஸாரும் சேர்ந்து கொண்டுதாக்கினர் என்றார்.

சபாநாயகரிடம் அதிமுக புகார்:

இந் நிலையில் சட்டசபையில் திமுகவினரின் தாக்குதலிலிருந்து தங்களைக்காப்பாற்றக் கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.

சபாநாயகர் ஆவுடையப்பனை அவரது அறைக்குச் சென்று சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் மனு ஒன்றைக்கொடுத்தனர்.

அதில், சட்டசபையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, திமுக மற்றும் காங்கிரஸ்உறுப்பினர்கள் தங்களை ஒன்று சேர்ந்து தாக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகஉள்ளது. எனவே அதிமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு உரிய பாதுகாப்பும், வாய்ப்பும்அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

பாமக, கம்யூ கண்டனம்:

சட்டசபை பயங்கரவாதத்தில் அதிமுக ஈடுபடுகிறது என்று பாமக, இந்திய கம்யூனிஸ்ட்கட்சிகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

சட்டசபையில் இன்று நடந்த மோதல் குறித்து சட்டமன்ற பாமக துணைத் தலைவர்வேல்முருகன் கூறுகையில்,

சட்டசபையில் இன்று அதிமுகவினர் மைக்குகளைப் பிடுங்கி காங்கிரஸ்உறுப்பினர்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். சட்டசபையை போர்க்களமாக்கஅவர்கள் முயன்றனர். முதல்வரையும் அவர்கள் தாக்கப் பாய்ந்தனர்.

முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் இருக்கை மீது ஏறி காங்கிரஸ்உறுப்பினர்களை அடிக்கப் பாய்ந்தார். அதிமுகவினரின் இந்த நடவடிக்கை கடும்கண்டனத்துக்குரியது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியம் கூறுகையில், இன்று நடந்த கசப்பானநிகழ்வுகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

முதல்வரையே தாக்க முயல்வது என்பது தமிழக அரசியலில் மிகப் பெரியகளங்கமாகும். வன்முறையை மனதில் கொண்டு உறுப்பினர்கள் சட்டசபைக்கு வருவதுகடும் கண்டனத்துக்குரியது.

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+