வழக்கு போட கோரும் அடிபட்ட ஞானசேகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மைக்கை உடைத்து அடிக்க முயன்றஅதிமுக உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமைக் அடி வாங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. திமுக, காங்கிரஸ், அதிமுகஉறுப்பினர்கள் அடித்துக் கொண்டனர். இதில் முதல்வரையும் தாக்க முயற்சி நடந்தது.

சட்டசபை கலாட்டா குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் கூறுகையில்,

காலையிலிருந்தே அதிமுகவினர் குறுக்கிடுவதும், கோஷமிடுவதுமாக இருந்தனர்.காங்கிரஸ் உறுப்பினர் பீட்டல் அல்போன்ஸ் பேசும்போதும் அவர்கள் குறுக்கிட்டு,உட்காருடா, உட்காருடா என்று கோஷமிட்டபடி இருந்தனர்.

இதை காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கண்டித்தோம்.

அப்போது அதிமுக உறுப்பினர்கள் கலைராஜன், சி.சின்னச்சாமி, ஆர்.சின்னச்சாமி,பாண்டுரங்கன், சி.வி.சண்முகம் ஆகியோர் எழுந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கோவைதங்கம், விடியல் சேகர், ராஜசேகரன், ராம்பிரபு, சிவராஜ் ஆகியோரைத் தாக்கமுற்பட்டனர்.

கலைராஜன் தனக்கு முன்பு இருந்த மைக்கை உடைத்து என்னைத் தாக்கினார். இதில்எனது இடது கையில் காயம் ஏற்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட, முதல்வரைத்தாக்க முயன்ற அதிமுக உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைஎடுக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்ஞானசேகரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+