அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல!

Subscribe to Oneindia Tamil

சென்னை :

கடந்த இருபது ஆண்டுகளில் தமிழக சட்டசபையில் 3 முறை மிகப் பெரிய அளவில்மோதல்கள் நடந்துள்ளன. முன்பு நடந்த இரு சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் நேற்றுநடந்த சம்பவம் சாதாரணமானது தான்.

முதல் மோதல் 1998ம் ஆண்டு நடந்தது. ஜனவரி 28ம் தேதி எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின்னர் கூடிய சட்டசபைக் கூட்டத்தில், ஜெயலலிதா ஆதரவு அதிமுகஉறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்து ஜானகி அம்மாளுக்குஆதரவாக இருந்த அதிமுக உறுப்பினர்களை சரமாரியாகத் தாக்கினர்.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக அடித்துக் கொண்டனர். மைக்குகள்பறந்தன, டேபிள் வெயிட்டுகளை ராக்கெட் போல வீசி தாக்கிக் கொண்டனர். இதில்பலருக்கும் மண்டை உடைந்தது.

ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பத்திரிக்கையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குச் சென்றுஅங்கிருந்த இருக்கையை தூக்கி எதிர் தரப்பை நோக்கி வீசினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த, பார்வையாளர் மாடத்தில் இருந்த ஒரு காங்கிரஸ்எம்.பி. தன் பங்குக்கு அங்கிருந்த ஒரு இருக்கையைத் தூக்கி கீழே குறி பார்த்துவீசினார். நல்ல வேளையாக இந்த இரு இருக்கைகளும் யாரையும் பதம்பார்க்கவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த போர் நடந்தது. சண்டை முடிந்து சட்டசபைஒத்திவைக்கப்பட்டு ஜானகி ஆதரவாளர்கள் வெளியேறினர். பின்னர், ஜெயலலிதாஆதரவு எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் சட்டசபைக்குள் தனிக்கூட்டத்தை நடத்தினர்.

ஜானகி அம்மாளுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்து அதுநிறைவேறியதாக அறிவித்தனர்.

ஆனால் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ஜானகி ஆதரவு அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் குண்டர் படையைத் திரட்டிக் கொண்டுசட்டசபைக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஜெயலலிதா அதிமுக மற்றும் காங்கிரஸ்எம்.எல்.ஏக்களை சரமாரியாக அந்தக் கும்பல் தாக்கியது.

இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். வால்டர் தேவாரம் தலைமையில்நுழைந்த போலீஸ் படை சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக,சட்டசபைக்குள் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டியடுத்தது.

இந்த சம்பவம் நடந்த ஒரு நாளைக்குப் பின்னர் ஜானகி அம்மாளின் ஆட்சி டிஸ்மிஸ்செய்யப்பட்டது. சட்டசபையும் கலைக்கப்பட்டது.

இதற்குப் பின்னர் 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி இன்னொரு வன்முறைச் சம்பவம்சட்டசபைக்குள் நடந்தது. அப்போது ஆட்சியில் இருந்தது திமுக.

எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக, அதன் தலைவராக ஜெயலலிதா.

சட்டசபையில் பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்ய தயாரானார் முதல்வர் கருணாநிதி.

ஆனால் பட்ஜெட் உரையை வாசிக்க கருணாநிதி எழுந்தபோது, எதிரே அமர்ந்திருந்தஜெயலலிதா, கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் புத்தகத்தைப் பறிக்க முயன்றார்.

இதையடுத்து அவர் மீது புத்தகத்தை தூக்கி வீசினார் ஜெயலலிதா. அதில்கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி விழுந்து உடைந்தது.

இதனால் ஆவேசம் அடைந்த திமுக உறுப்பினர்களும், அமைச்சர்களும்,அதிமுகவினரை சுற்றிச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

ஜெயலலிதாவின் தலைமுடியையும் பிடித்து உலுக்கினர் திமுகவினர். உள்ளே பெரும்கலவரம் நடந்தது.

அப்போது அமைச்சராக இருந்த துரைமுருகன் ஜெயலலிதாவின் சேலைமுந்தானையைப் பிடித்து இழுத்ததாக பின்னர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம்தெரிவித்தார். அவரது தலைமுடியையும் பிடித்து உலுக்கி பெரும் கலவரம் நடந்தது.

இந்தக் கலவரம் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இந்தமோதலில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த மூப்பனார் உள்ளிட்ட காங்கிரஸாரும்கூட லேசான காயமடைந்தனர்.

இந்த இரு சம்பவங்களுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் சட்டசபையில்வன்முறை வெடித்துள்ளது. ஜெயலலிதா எதிர்க் கட்சி வரிசைக்கு வரும்போது தான்இந்த எல்லா சம்பவங்களும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு சம்பவங்களை ஒப்பிடுமபோது இம்முறை ரத்தம் வரும் அளவுக்கு பெரியஅடிதடி ஏதும் இல்லை என்று வேண்டுமானால் நம்மை சமாதானப்படுத்திக்கொள்ளலாம்.

பாருக்குள்ளே நல்ல நாடு ... நம்ம தமிழ்நாடு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+