காவிரி கால்வாய்களை தூர் வார அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து காவிரிப் பாசனப் பகுதிகளில்உள்ள கால்வாய்கள், கிளைக் கால்வாய்களை ரூ. 10 கோடி செலவில் உடனடியாகத்தூர் வார தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும், அதற்கு வசதியாக ஆறுகள்மற்றும் வாய்க்கால்களில் தூர் வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய காவிரிப் பாசனப்பகுதி மாவட்டங்களில் காவிரி பாசனத் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும்வகையில் அவசியமான ஒரு சில ஆற்றுப் பகுதிகள் மற்றும் கிளைக் கால்வாய்களைஆய்வு செய்து தேவைப்படும் இடங்களைத் தேர்ந்தெடுத்து விரைவில் அப்பகுதிகளில்தூர் வாரி செப்பனிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பணிகளை போர்க்கால அடிப்படையில், குறுகிய கால ஒப்பந்தப்புள்ளிதொடங்கி செய்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகள், வழிவகைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கனவே காவிரி டெல்டா பாசனப் பகுதி கால்வாய்களைப் பராமரிக்கவென்று இந்தஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து 10 கோடி ரூபாய் செலவில் இப்பணிகள்சுமார் 500 இடங்களில் செவ்வனே செய்து விவசாயிகளுக்குத் தண்ணீர் வேகமாகவும்,வீணாகாமலும் சிறப்பான முறையில் சென்று அடையும்படி பணிகளைச் செய்துமுடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+