கொக்கு சுடும் துப்பாக்கி பாதுகாப்பு-ஜெ புகார்
சென்னை:
எனக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு தளர்த்தப்படவில்லை என்றுதமிழக அரசு கூறுகிறது. அது சுத்தப் பொய் என மாஜி முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் வெள்ளிக்கிழமை காலை ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. டாஸ்மாக் மதுக் கடைகள் தொடர்பாகவும்சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பாகவும் திமுக உறுப்பினர்அப்பாவு, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பேசுகையில்அவர்களை டேய் உட்காருடா.. என்று ஒருமையில் கூறினர் அதிமுக எம்எல்ஏக்கள்.இதையடுத்து அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பெரும் மோதல்ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இந் நிலையில் திமுகஉறுப்பினர்கள் மீதும் அதிமுகவினர் பாய்ந்தனர். முதல்வர் கருணாநிதியை நோக்கிஅதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு அடிக்கப் பாய்ந்து ஓடினார்.
சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் பிரயோகப்படுத்திய வார்த்தைகளை அச்சில்ஏற்ற முடியாத அளவுக்கு வன்முறையாகவும், ஆபாசமாகவும் இருந்தன.
இந்த ரகளையைத் தொடர்ந்து சபையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள்அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார். மேலும்இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் அவர்கள் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,
சட்டசபையில் இன்று என்ன நடந்தது என்பது குறித்து அதிமுக உறுப்பினர்கள்என்னிடம் விளக்கினர். காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள்தான் அதிமுகஉறுப்பினர்களைத் தாக்கியுள்ளனர்.
அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் நீக்கி வைத்திருப்பது மிகவும் கடுமையானதண்டனையாகும்.
சட்டசபையில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது. ஆளுனர் உரை பொய்களின்அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும். பல உண்மைக்குப் புறம்பான தகவல்களைஆளுநர் உரையில் தெரிவித்துள்ளார்கள். சட்டசபையில் இன்று பேசிய காங்கிரஸ்,திமுக உறுப்பினர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியுள்ளனர்.
அதிமுக உறுப்பினர்கள் விளக்கம் அளிக்கவும், மறுப்பு தெரிவிக்கவும் முற்பட்டபோதுஅவர்களுக்குப் பேசவே வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாகசம்பிரதாயமான நிகழ்ச்சிகளே சட்டசபையில் நடந்து வந்தன. வெள்ளிக்கிழமைமுதல்தான் வழக்கமான நிகழ்ச்சிகள் தொடங்கின.
ஆனால் முதல் நாளிலேயே திட்டமிட்டு அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றிஇருக்கிறார்கள். அதிமுக உறுப்பினர்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றவேகாங்கிரஸார் மூலம் திட்டமிட்ட ஒரு நாடகத்தை அவர்கள் அரங்கேற்றியிருக்கிறார்கள்.
அதிமுகவின் குரலை அவ்வளவு சீக்கிரம் ஒடுக்கி விட முடியாது. அதிமுகவுக்கு 61உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 60 பேரைத்தான் சஸ்பெண்ட்செய்திருக்கிறார்கள். ஆனால் நான் இருக்கிறேன். உண்மையை உரைத்துக் கூற நான்சட்டசபைக்கு செல்லப் போகிறேன்.
எனக்கு சட்டசபையில் பாதுகாப்பு இருக்கிறதோ, இல்லையோ, அதுகுறித்து நான்கவலைப்படவில்லை. அதிமுகவைப் பேச விடாமல் அவர்கள் தடுக்கப்பார்க்கிறார்கள். அதை அவ்வளவு சீக்கிரம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதிமுகஉறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டால் உண்மையைச் சொல்ல யாரும்இருக்க மாட்டார்கள் என அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் நான் இருக்கிறேன். நான் சட்டசபைக்குச் சென்று உண்மையை எடுத்துக்கூறுவேன்.
எனக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு தளர்த்தப்படவில்லை என்றுதமிழக அரசு கூறுகிறது. அது சுத்தப் பொய். இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது தமிழகஅரசால் நிர்ணயிக்கப்படுவது அல்ல. மத்திய அரசு முடிவு செய்யும் பாதுகாப்பு அது.
இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கு யாரால் ஆபத்து ஏற்படும்,எங்கிருந்து ஆபத்து வரும், அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் உள்ளிட்டவற்றைகணக்கில் கொண்டு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்படுகிறது. எனக்கு விடுதலைப்புலிகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதால் எனக்குஇசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை முடிவு செய்தது.
ஆனால் இந்த ஆட்சி வந்தவுடேனேயே எனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பைக்குறைத்து விட்டார்கள். இதுதொடர்பாக டெல்லி சென்ற அதிமுக எம்.பிக்கள்பிரதமரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து இங்குள்ள டிஜிபி அலுவலகம் ஒருஅறிக்கை வெளியிட்டது.
அதில் எனக்கு 55 பேர் பாதுகாப்பு தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தனையும்பொய்.
எனது பாதுகாப்புக்கு 7 பேர்தான் உள்ளனர். அந்த 7 பேரிலும் கூட 6 பேர்தான்இரவிலும் வீட்டில் இருப்பார்கள். 7வது நபர் பகல் நேரத்தில் மட்டும்தான் வீட்டில்இருப்பார்.
இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி குருவி சுட பயன்படுத்தும் துப்பாக்கி.நவீன ரக துப்பாக்கி இவர்களிடம் இல்லை.
55 பேர் பாதுகாப்பு என்று கூறுகிறார்களே அது எப்படித் தெரியுமா? நான் எங்காவதுவெளியில் செல்வதாக இருந்தால் எனது தனி பாதுகாப்பு அதிகாரி போன் செய்துபாதுகாப்புக்கு ஆட்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்வார். அதையடுத்து அவர்கள்வருவார்கள்.
எனது பாதுகாப்புக்கு என்று கடந்த ஆட்சியில் சிறப்பு பாதுகாப்புப் பிரிவுஅமைக்கப்பட்டது. அதில் உள்ள காவலர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள்வழங்கப்பட்டன. அவர்களை எல்லாம் இப்போது எடுத்து விட்டனர். ஆயுதப் படைபோலீஸாரையே பாதுகாப்புக்கு நியமித்துள்ளனர்.
என்னைப் பொருத்தவரையில் இதுகுறித்து நான் கவலைப்படவில்லை. யாராகஇருந்தாலும் ஒரு நாள் சாகத்தான் வேண்டும். அந்த மரணம் ஒருமுறைதான் வரும்.எனவே அதுகுறித்து நான் கவலைப்படுவதில்லை.
சட்டசபைக்கு வெளியேயும் எங்களது கட்சியினர் மீது திமுகவினர் விஞ்ஞானப்பூர்வமாக தாக்குதல் நடத்துகிறார்கள். உதாரணமாக பாபு என்ற அதிமுக தொண்டர்கள்தாக்கத் தீர்மானித்து விட்டார்கள் என்றால், அவர் மீது முதலில் காவல் நிலையத்தில்புகார் கொடுக்கிறார்கள். அதைப் பதிவு செய்கிறார்கள். அதன் பின்னர் அந்த பாபுவைபோய் தாக்குகிறார்கள்.
தாக்கப்பட்ட நபர் காவல் நிலையத்திற்கு போய் புகார் கொடுக்க முயன்றால்,உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறி அவரை சிறையில் அடைத்துவிடுகிறார்கள். இதுதான் நடக்கிறது. இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடுவழங்குவதை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது. இதுதொடர்பாக நான் சனிக்கிழமைசட்டசபையில் விரிவாகப் பேசவுள்ளேன். எனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படுமானால்இதுகுறித்து பேசுவேன்.
அங்கே வாய்ப்பு கிடைக்காவிட்டால் உங்களிடம் (செய்தியாளர்கள்) வந்துதெரிவிக்கிறேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications