சட்டசபை காவலர்கள் கூண்டோடு மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே நடந்த மோதலின்போதுசரிவர செயல்படாத காரணத்தால் அவைக் காவலர்கள் அத்தனை பேரும் கூண்டோடுமாற்றப்பட்டனர். புதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபைக்குள் காவல் பணியில் ஈடுபடுபவர்கள் மார்ஷல் எனஅழைக்கப்படுகிறார்கள். சபையில் ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள், அடிதடி,ரகளை போன்றவை ஏற்படும்போது இவர்கள்தான் உள்ளே புகுந்து நிலைமையை சரிசெய்வார்கள்.

இதுவரை அவைக் காவலர்களாக இருந்தவர்கள் அதிமுக ஆட்சியில்நியமிக்கப்பட்டவர்கள். நேற்று அதிமுகவினர் கலாட்டாவில் ஈடுபட்டபோதுஅவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால் உடனே வெளியேற்றாமல் அதிமுகவினருடன் கெஞ்சிப் பேசிவெளியேறுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர் அவைக் காவலர்கள். இதனால்சபாநாயகர் பலமுறை மைக்கில் அவர்களை வெளியேற்றுங்கள் வெளியேற்றுங்கள்என்று கத்த வேண்டி வந்தது.

குறிப்பாக முதல்வர் கருணாநிதியை தாக்க சேகர்பாபு பாயந்து ஓடிவந்தபோது,அவரை முதல்வர் இருக்கைக்கு அருகே வரை வர விட்டனர் காவலர்கள்.

முதல்வருக்கு அருகே அவைக் காவலர்கள் யாருமே இல்லை. அமைச்சர்கள்தான் சுற்றிநின்று கருணாநிதிக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள்.

இதனால் அதிருப்தி அடைந்த சபாநாயகர் ஆவுடையப்பன், அவைக் காவலர்களைகூண்டோடு மாற்ற உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் பழைய காவலர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். புதிதாக அவைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குநேற்று இரவே பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று முதல் அவர்கள் காவல் பணியில்ஈடுபடுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+