பாண்டிச்சேரி டூ புதுச்சேரி-மத்திய அரசு ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாண்டிச்சேரி என்ற பெயரை புதுச்சேரி என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது.

பாண்டிச்சேரியின் ஆரம்ப கால பெயர் வேதபுரி என்பதாகும். பின்னர் இது புதுச்சேரி,பொந்திசேரி, பொதுகே என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. பிரெஞ்சுஆட்சிக்காலத்தில் பாண்டிச்சேரி என்று னது.

பிரெஞ்சு ஆட்சி போய் இந்தியாவுடன் புதுவை இணைந்த பிறகும் கூட பாண்டிச்சேரிஎன்ற பெயரே இருந்து வருகிறது. ஆனால் இப்பெயரை மாற்றி விட்டு புதுச்சேரி என்றபெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங்தலைமையிலான மத்திய அமைச்சரவை பரிசீலித்தது.

அக்கூட்டத்தில் புதுச்சேரி என்ற பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல்ஸ ஒளிபரப்பு அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷிசெய்தியாளர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரி வாழ் பொது மக்களின் நீண்ட நாள்கோரிக்கையான புதுச்சேரி பெயர் மாற்ற கோரிக்கை குறித்து அம் மாநிலசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

இதற்கு ஒப்புதல் அளிக்கவும், புதுச்சேரி என மாற்றம் செய்ய வசதியாகநாடாளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரவும் மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+