வீராணத்துக்கு ராயல்டி கேட்கும் வி.சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீராணம் ஏரியிலிருந்து சென்னை நகர மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்குப் பிரதிஉபகாரமாக வீராணம் பகுதி மக்களுக்கு அரசு ராயல்டி கொடுக்க வேண்டும் என்றுவிடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டுகாட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பேசுகையில்,

வீராணம் ஏரி எனது தொகுதிக்குள் வருகிறது. இந்த ஏரியின் கரையை உயர்த்தி,ஏரியை தூர் வார வேண்டும்.

சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க உதவுகிறோம் என்ற பெருமை மட்டும்எங்களுக்குப் போதாது. அதற்கு ஈடாக, சென்னை மாநகரம் எங்களுக்கு எதைத் தரப்போகிறது? எனவே வீராணம் பகுதிக்கு ராயல்டி கொடுக்க வேண்டும். அதை வைத்துஅந்தப் பகுதியை மேம்படுத்த வேண்டும்.

அதேபோல மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில்50 இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்றார்ரவிக்குமார்.

இதற்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதிலளிக்கையில்,

கடந்த 1996 முதல் 2001 வரை கலைஞர் முதல்வராக இருந்தபோது,மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கொள்கை முடிவுஎடுக்கப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டன. விழுப்புரத்தில் கொண்டு வர முயற்சித்தோம். ஆனால்அதற்குள் ஆட்சி மாறி விட்டதால் முடியவில்லை.

இந்த ஆட்சியில் மீண்டும் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைதொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாதவிக்கும் சிலை:

ரவிக்குமார் தொடர்ந்து பேசுகையில், கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகிசிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவது சந்தோஷமானதுதான்.அதேசமயம் கண்ணகி மட்டும்தான் கற்புக்கரசி போலவும், மாதவி அதில் சற்றுகுறைந்தவர் போலவும் எண்ணம் நிலவுகிறது.

இதைப் போக்கும் வகையில் கண்ணகி சிலைக்கு அருகிலேயே மாதவிக்கும் சிலைவைக்க வேண்டும் என்றார். இதைக் கேட்டதும் சபாநாயகர், முதல்வர் உள்ளிட்டஅனைத்து உறுப்பினர்களும் சிரித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+