பணிகிறது திமுக: ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு தர சம்மதம்?
டெல்லி:
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துக் கொள்ள திமுக ஒப்புதல்அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 5 அமைச்சர்பதவியையும் கொடுக்க திமுக முன் வந்துள்ளது என்கிறார்கள்.
தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் இல்லாததால்,தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த திமுக, தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன்ஆட்சி அமைத்துள்ளது.ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என்று பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துவிட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோரிவருகிறது.
இந்த கோரிக்கை குறித்து கட்சி மேலிடம் இதுவரை எந்தப் பதிலையும் சொல்லாமல்இருக்கிறது.
ஆனால் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையேஆட்சியில் பங்கு கேட்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டு வருவதாலும்,போஸ்டர் போரில் காங்கிரஸார் இறங்கியிருப்பதாலும்,
திமுகவிடம் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று மேலிடம் வலியுறுத்தத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை பரிசீலித்த திமுக வேறு வழியின்றி தற்போதுஅதை ஏற்க முடிவு செய்துள்ளது. ஆட்சியில் பங்கு தரத் தயார் என காங்கிரஸ்மேலிடத்திடம் திமுக தலைமை தெரிவித்துள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு, எம்.எல்.ஏக்கள் விகிதாச்சரப்படி 12 அமைச்சர்பதவியை ஒதுக்குமாறு காங்கிரஸ் தரப்பு திமுகவிடம் கோரியுள்ளது.
ஆனால் இதை எதிர்பார்க்காத திமுக, அத்தனை பதவிகளைத் தர முடியாது,அதிகபட்சம் 5 அமைச்சர் பதவியை மட்டுமே தர முடியும் என்று கூறியுள்ளதாம்.
முதலில் யோசித்த காங்கிரஸ் இப்போதைக்கு ஐந்து இடங்களுக்கு ஓ.கேசொல்லியுள்ளதாம்.
புதுவை- ஆட்சியில் திமுகவுக்கு இடம்:
இதற்கிடையே, தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு தருவதைப் போலபுதுவையில் திகவுக்குப் பங்கு தர வேண்டும் என்றும் திமுக தரப்பு காங்கிரஸைவலியுறுத்தியுள்ளதாம்.
அதில் பிரச்சினை இருக்காது என்று காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
விரைவில் இந்த ஆட்சிப் பங்கு தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள்வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications