அக்னி நட்சத்திரம் ஓவர்!
சென்னை:
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஒரு வழியாக இன்றுடன் ஓய்ந்தது.
ஆண்டுதோறும் கோடை காலத்தின் உச்சமாக கத்திரி வெயில் வறுத்தெடுக்கும். கடந்தஆண்டு கத்திரி வெயில் காலத்தின்போது வெயிலின் தாக்கம் அவ்வளவாக இல்லை.அதைத் தொடர்ந்து தமிழகத்தையே உலுக்கிய கன மழையால் தமிழகமே ஸ்தம்பித்துப்போனது.இந்த ஆண்டு வெயில் எப்படி இருக்கப் போகிறதோ என்று மக்கள் பயந்தவண்ணம்இருந்தனர். அதற்கேற்ப கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில்வெயில் கொளுத்தியது. 109 டிகிரி வரை வேலூர், சென்னை, சேலம் போன்றஊர்களில் வெயில் கொளுத்தியது.
ஆனால் கத்திரி தொடங்கியவுடன் வெயிலின் தாக்கம் எதிர்பாராத அளவுக்குக்குறைந்துவிட்டது. கடந்த 4ம் தேதி கத்திரி தொடங்கியது. கத்திரி தொடங்கிய நாள்முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை பெய்யத் தொடங்கியது.இதனால் வெயிலின் தாக்கம் அவ்வளவாக இல்லை.
தலைநகர் சென்னையிலும் அவ்வப்போது குளிர்ந்த காசு வீசுவதும், லேசான மழையும்,காற்றுமாக இருந்ததால் வெயில் கொடுமை அவ்வளவாக இல்லை.
இந் நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது. இதனால் தமிழகத்தில்படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைந்து குளுமை குடிகொள்ளும் என்று மக்கள்நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications