ஓபி நீக்கம்- எதிர்க்கட்சி தலைவியானார் ஜெயா
சென்னை:
சட்டசபை அதிமுக தலைவர் பொறுப்பிலிருந்து (எதிர்க்கட்சித் தலைவர்) ஓ.பன்னீரைநீக்கிவிட்டு எதிர்க்கட்சித் தலைவியாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாதேர்வு செய்யப்பட்டார்.
சட்டசபையில் பெரும் ரகளையில் ஈடுபட்டதன் காரணமாக அதிமுக உறுப்பினர்கள்60 பேர் இந்தத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் கடந்தசனிக்கிழமை நடந்த விவாதத்தில் ஜெயலலிதா தனியாக சென்று கலந்து கொண்டுசுமார் அரை மணி நேரம் பேசினார்.சட்டசபையில் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ள அதிமுகவுக்கு வலுவானதலைவர் இல்லை. முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தால் அவையில் சரியாகப்பேச முடியவில்லை. திமுக அரசை ஜெயலலிதா நேரில் தொடர்ந்து வந்தால் தான்கலகலக்க வைக்க முடியும் என அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் கருத்துத்தெரிவித்தனர்.
மேலும் அம்மாவே எதிர்க்கட்சித் தலைவி ஆக வேண்டும் என்று அதிமுகஎம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் வழக்கம் போல கடைசி நிமிடத்தில் அது ரத்து செய்யப்பட்டு விட்டது.
இன்று காலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில்நடந்தது. இதில் புதிய தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படடார்.
துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வம், கொறடாவாக செங்கோட்டையனும், பொருளாளராக ஜெயக்குமாரும்,செயலாளர்களாக எஸ்.கருப்பசாமி, சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவி ஆகியுள்ள ஜெயலலிதாவுக்கு கேபினட் அமைச்சருக்கானஅந்தஸ்து கிடைக்கும். சட்டசபை விவாதங்களில் அவர் பேச கூடுதல் நேரம்கிடைக்கும், விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசவும் அனுமதி கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications