குண்டுவெடிப்பு கைதி பரோலில் வந்து திருமணம்
கோவை:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கைதி, 10 மணிநேர பரோலில் வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ளவர் அப்துல் சலாம். 35 வயதாகும் இவரது வீடு மானியத்தோட்டத்தில் உள்ளது. சலாமுக்கும், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தபுஷ்ரா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.இதையடுத்து தன்னை 10 மணி நேர பரோலில் விடுவிக்க வேண்டும் என்று கோரிஅப்துல் சலாம் சார்பில் சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பரோலை அனுமதித்தது. இதேபோல சிறையில்அடைக்கப்பட்டுள்ள சலாமின் சகோதரர் அப்துல் ரகீம், நண்பர் தடா அஸ்லாம்ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரோலில் வெளியே வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அப்துல் சலாம்பரோலில் விடுவிக்கப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அப்துல் சலாமை போலீஸார்அவரது வீட்டுக்கு காலையில் கொண்டு சென்றனர்.
பின்னர் திருமணம் நடந்தது. மணப்பெண் புஷ்ரா கோவை வரவில்லை.கேரளாவிலேயே இருந்தார். இருப்பினும் அவரது சம்மதம் ஏற்கனவே பெறப்பட்டுரிஜிஸ்டரில் அவர் கைழுெத்திட்டிருந்தார்.
பெண்ணின் உறவினர்கள் 15 பேர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்துல்சலாமும் கையெழுத்து போடவே திருமணம் முடிந்தது.
பின்னர் திருமண விருந்து பரிமாறப்பட்டது. திருமணத்திற்குப் பின் மாலையில்பரோலில் வெளிவந்த 3 பேரும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுஅடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications