அசாதாரண சூழலால் பொறுப்பை ஏற்கிறேன்-ஜெ
சென்னை:
சட்டசபையில் ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுளளதால், அதிமுக எம்.எல்.ஏக்கள்,கட்சியினர், பொதுமக்கள் வேண்டுகோளால் எதிர்க்கட்சித் தலைவி பொறுப்பைஏற்றுள்ளேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவியாக இன்று ஜெயலலிதா தேர்வுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,தமிழக சட்டசபையில் கருத்துக்களை சுதந்திரமாக எடுத்து வைக்க முடியாதஅசாதாரண சூழல் நிலவுகிறது. முதலில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இன்று ஒரு அசாதாரண சூழ்நிலைஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக சார்பில் சட்டமன்ற பேரவைக்குள் எங்களது குரலை வெளிப்படுத்தயாருக்குமே வாய்ப்பில்லை என்ற அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் நான் சட்டசபைக்குச் சென்று பேசினேன்.
ஆனால் நாளை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும். இதில் அதிமுகவினர்யாருமே பேசக் கூடாது என்று திட்டமிட்டு, வேண்டும் என்றே என்னைத் தவிரஅனைத்து உறுப்பினர்களையும் நீக்கி வைத்திருக்கிறார்கள்.
மன்னிப்பு கேட்டால் அதிமுக உறுப்பினர்களை அனுமதிப்பதாக கூறியிருக்கிறார்கள்.அதிமுக உறுப்பினர்கள மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுக்க முடியாது, கொடுக்கவும்மாட்டார்கள். அதிமுக எந்தத் தவறையும் செய்யவில்லை. கொடுக்கவில்லை என்றால்யாரும் பேச முடியாத நலை ஏற்படும்.
நான் சாதாரண உறுப்பினராக இருந்தால் ஒரு விவாதத்தில் ஒருமுறைதான் கலந்துகொள்ள முடியும், பேச முடியும்.
ஆனால், பிரதான எதிர்க்கட்சித் தலைவராகி விட்டால் எனது பேச்சு உரிமையைஅவர்களால் மறுக்க முடியாது. எனவேதான் அதிமுக எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள்,பொதுமக்கள் நிர்பந்தத்தை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க நான்சம்மதித்தேன்.
இனிமேல் நான் சட்டசபையில் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது.
சட்டசபையில் சந்திப்பேன்: ஜெ
சட்டசபையில் என் மீது கொண்டு வரப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்சினையை நாளைசந்திப்பேன்.
இந்தக் கூட்டத்தில் நான் செலக்ட் செய்யப்படவில்லை. ஒருமனதாக எலக்ட்ஆகியுள்ளேன். இப்போதே நான் எதிர்க்கட்சித் தலைவர்தான். சட்டசபையில் அதிமுகபிரதான எதிர்க்கட்சி. அதிமுக சார்பில் சட்டசபைக்கு யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றார் ஜெயலலிதா. என்றார்ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications