சட்டசபையில் ஜெ மீது உரிமை மீறல் பிரச்சினை!அதிமுக எம்எல்ஏக்கள் தண்டனை குறைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு தவறான தகவல் கொடுத்த மாஜி முதல்வர் ஜெயலலிதாமீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 26ம் தேதி அதிமுகவினர் சட்டசபையில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் கருணாநிதியைஅடிக்கப் பாய்ந்தார் அதிமுக எம்எல்ஏ சேகர் பாபு. காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் அதிமுகவினர் மைக்கைப்பிடுங்கி அடித்தனர்.

இந் நிலையில் இன்று காலை அவை கூடியதும் இந்தோனேஷியாவில் பூகம்பத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டனர். பின்னர் எழுந்த மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி,

சட்டசபையில் நடந்த சம்பவங்களை திரித்து பேட்டி கொடுத்துள்ள ஜெயலலிதா மீது உரிமை மீறல் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர் கூறுகையில், கடந்த 26ம் தேதி பீட்டர் அல்போன்ஸ்அவையில் பேசிக் கொண்டிருந்தபோது அதிமுக எம்எல்ஏக்கள் வேண்டுமென்றே அவரை பேச விடாமல்இடையூறு செய்தனர். மேலும் அவரை தாக்கவும் செய்தனர். மைக்குகளை உடைத்தனர். முதல்வரைத் தாக்கவும்முயற்சி நடந்தது.

அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் கருப்பசாமி பாண்டியனும் முதல்வரை சுற்றி அரணாகநின்றதால் தான் அந்தத் தாக்குதல் தவிர்க்கப்பட்டது.

ஆனால், அந்த சம்பவம் குறித்து பத்திரிக்கைகளுக்கு தவறான பேட்டி அளித்துள்ளார் ஜெயலலிதா.இத்தனைக்கும் அவர் அன்று அவைக்கு வரவும் இல்லை. நடந்ததை நேரில் பார்க்கவும் இல்லை. ஆனால்,காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் தான் அதிமுகவினரைத் தாக்கியதாக தவறான தகவலைக் கூறியுள்ளார். இதுஅவையின் மரியாதையை குலைக்கும் செயலாகும்.

அவரது இந்தப் பேட்டி அதிமுக பத்திரிக்கையான நமது எம்ஜிஆரில் வெளியானது. ஜெயா டிவியிலும் மீண்டும்மீண்டும் ஒளிபரப்பானது.

இதனால் அவர் மீது உரிமை மீறல் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் ஆற்காடு வீராசாமி.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக முகாந்திரம்இருப்பதாகக் கருதுகிறேன். இதனால் இந்த பிரச்சனையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இதை உரிமைகுழுவின் பரிசீலனைக்கு அனுப்ப உத்தரவிடுகிறேன் என்றார்.

மதிமுக வெளிநடப்பு:

இந் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று மதிமுகஎம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரத்தைக் கிளப்பிப் பேசிய மதிமுக எம்எல்ஏகண்ணப்பன்,

சட்டசபை விதி எண் 117வது பிரிவின்படி, அவையில் பிரச்சனை செய்யும் உறுப்பினரை மட்டுமே சபாநாயகரால்சஸ்பெண்ட் செய்ய முடியும். ஒட்டுமொத்தமாக எல்லோரையும் சஸ்பெண்ட் செய்ய முடியாது என்றார்.

அப்போது இடைமறித்த காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், 117வது விதிப்படி அவையின்கண்ணியத்தைக் காக்க எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு என்றார்.

அமைச்சர் வீராசாமி பேசுகையில், சபாநாயரின் அதிகாரம் குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லைஎன்றார்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், அதிமுக எம்எல்ஏக்களை கூண்டோடு சஸ்பெண்ட் செய்யும்முடிவை இந்த அவை ஒருமனதாகத் தான் எடுத்தது. அதைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்றார்.

ஆனால், இதைக் கண்டித்து மதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

கருணாநிதி நினைவூட்டல்:

இதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ செல்வமும் இதே கோரிக்கையை வலியுறுத்திபேசியபோது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி,

ஜனநாயக ரீதியாக இத்தகைய கோரிக்கைகள் ஏற்கக் கூடியவைதான். ஆனால் கடந்தகாலங்களில் நடந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். அன்பழகன் உள்ளிட்ட 9 திகஎம்.எல்.ஏக்களின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் இதே சபையில்நடந்துள்ளது. பரிதி இளம்வழுதிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

முரசொலி பத்திரிக்கை மீது உரிமைப் பிரச்சினை கொண்டு வரப்பட்டு, அதன்ஆசிரியருக்கு தனிக்கூண்டு அமைத்து அதில் நிற்க வைத்து அழகு பார்த்தனர்.

வருத்தம் தெரிவித்தால் நடவடிக்கை பரிசீலிக்கப்படும் என அவைத் தலைவர்கூறியுள்ளதை உறுப்பினர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

ஆனால், இந்தப் பதிலிலும் திருப்தி இல்லை என்று கூறி விடுதலைச் சிறுத்தைஉறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

சஸ்பெண்ட் உத்தரவு தளர்த்தல்:

தொடர்ந்து கருணாநிதி பேசுகையில், கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் என்றஉத்தரவை நாளை மறுதினத்துடன் (31ம் தேதியுடன்) முடிக்க வகை செய்ய அவைத்தலைவர் பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ஆவுடையப்பன் 31ம் தேதியுடன் அதிமுகஎம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு முடிவுக்கு வருவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவை முன்னவர் அன்பழகன், அதிமுக எம்.எல்.ஏக்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கஅனுமதிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் எதிரொலியாகவருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.

மதமாற்ற தடை சட்ட நீக்க மசோதா:

தமிழக சட்டசபையில், மதமாற்றத் தடைச் சட்டம் மற்றும் டெஸ்மா சட்டங்களை நீக்க வகை செய்யும் சட்ட மசோதாக்கள் இன்று தாக்கல்செய்யப்பட்டன.

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ழுமையாக நீக்கவும், டெஸ்மா சட்டத்தை அறவே நீக்கவும்சட்டசபையில் சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்படும் என திமுக ஆட்சி அறிவித்திருந்தது.

அதன்படி இந்த சட்ட மசோதாக்களை சட்டத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று சபையில் தாக்கல் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+