கோட்டையில் அதிமுக எம்எல்ஏக்களுக்குதிடீர் தடை: போலீசுடன் மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தடை செய்யப்பட்ட அதிமுகஎம்.எல்.ஏக்களை தலைமைச் செயலக வளாகத்திற்குள்ளேயே நுழைய போலீஸார்தடை போட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளித்து போலீஸாருடன் பெரும்தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை கோட்டைக்குள் நுழைய போலீஸார் அனுமதித்தனர்.

சட்டசபையில் பெரும் ரகளையில் ஈடுபட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளைவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜெயலலிதா மட்டும் சட்டசபைக் கூட்டத்தில்கலந்து கொண்டு வருகிறார்.

இந் நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்துடன் ஜெயலலிதாசட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரை வரவேற்பதற்காக கோட்டைவளாகத்திற்கு காலை எட்டரை மணி முதலே அதிமுக எம்.எல்.ஏக்கள் காத்திருக்கத்தொடங்கினர்.

ஆனால் அவர்களை கோட்டை வளாகத்திற்குள்ளேயே அனுமதிக்காமல் போலீஸார்தடுத்து நிறுத்தினர்.

இதனால் அதிர்ந்து போன எம்.எல்.ஏக்கள், ஏன் உள்ளே விட அனுமதிக்காமல்தடுக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு காவலர்கள், உங்களை சஸ்பெண்ட்செய்துள்ளனர். எனவே உள்ளே அனுமதிக்க முடியாது என்றனர்.

ஆனால் இதை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஏற்கவில்லை. அப்போது அதிமுக உறுப்பினர்பதர் சையத், நான் நூலகத்திற்குச் செல்ல வேண்டும், உள்ளே விடுங்கள் என்றுகூறினார். ஆனால் அதையும் போலீஸார் ஏற்கவில்லை. இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை அதிகாரியை ஆவோசமாக தள்ளும் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன்

உள்ளே அனுமதிக்க விடாமல் தடுப்பது ஜனநாயக் குரல் வளையை நெரிப்பதற்குசமம் என்று அதிமுகவினர் கோஷமிட்டனர்.

அப்போது எம்.எல்.ஏக்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் ஆவேசமாக காவல்துறை அதிகாரிகளைப் பார்த்துஇப்போது உள்ளே விடுவீர்களா, மாட்டீர்களா என்று ஒரு விரலை காட்டியபடிஆவேசமாகக் கேட்டார்.

அப்போது ஒரு காவல்துறை அதிகாரி பாண்டுரங்கனை நெஞ்சில் கை வைத்துபின்னால் தள்ளினார். இதையடுத்து ஆவேசமான எம்.எல்.ஏக்கள் அந்தக் காவல் துறைஅதிகாரி மீது பாய்ந்து அவரை தள்ளி விட்டனர். போலீஸாரையும் அவர்கள் தள்ளமுயன்றனர்.

இதனால் இரு தரப்பினரும் பெரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.

போலீஸாரைப் பார்த்து பாண்டுரங்கன், இந்த நிலை இப்படியே நீடிக்காது, நாளைக்குஆட்சி மாறும், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கோபமாக கூறினார்.

சுமார் ஒரு மணி நேரம் பெரும் தள்ளுமுள்ளு நடந்தது. இந் நிலையில் போலீஸார்அதிமுக எம்.எல்.ஏக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இதையடுத்து உள்ளே சென்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் வரும்நுழைவாயிலுக்குப் போய் ஜெயலலிதாவை வரவேற்க குழுமினர்.

ஆனால் அங்கு நிற்கக் கூடாது என்று போலீஸார் விரட்டியதால் 4வது எண்நுழைவாயிலுக்கு விரைந்தனர். அங்கேயும் நுழையக் கூடாது என்று போலீஸார்கூறியதால் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் அறையில் உட்கார எங்களை அனுமதிக்க வேண்டும் என்றுஅதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர். அதை போலீஸார் ஏற்றுக் கொண்டுஅனுமதித்தனர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு அவர்கள் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது. ஆயுதம் தாங்கிய போலீஸார் அதிமுக எம்.எல்.ஏக்களை சூழ்ந்துநின்றதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தம்பித்துரை மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் கூறுகையில், எந்தமாநிலத்திலும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஉறுப்பினர்களை தலைமைச் செயலகத்திற்குள் அனுமதிக்க மறுப்பது ஜனநாயகப்படுகொலைக்கு சமமாகும்.

இந்த காவல்துறை அராஜகத்தை கண்டிக்கிறோம். ஜனநாயக கடமை ஆற்றுவதையாராலும் தடுக்க இயலாது, மறுக்கவும் இயலாது.

நாங்கள் சட்டசபை வளாகத்திற்குள் வரக் கூடாதே தவிர தலைமைச் செயலகத்திற்குள்வரலாம். இதைத் தடுப்பது எந்த வகையில் நியாயம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+