சிவகங்கை கூட்டுறவு வங்கி கட்டுப்பாடுகள் நீக்கம்
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்ட சிவகங்கைமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மீதானன கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும்வங்கி வழக்கம் போல் இயங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ. 19 கோடி அளவுக்கு பெரும் நஷ்டத்தைசந்தித்தது சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கி.
இதைத் தொடர்ந்து அந்த வங்கிக்கு கடந்த தமிழக அரசு ரூ. 12.50 கோடியைமுதலீடாக அளித்தது. ஆயினும் சொந்த நிதிகளில் ஏற்பட்ட இழப்பை காரணம் காட்டிவங்கியியல் ஒழுங்கு முறைச் சட்டம் 35 (ஏ)வின் கீழ் கொண்டு வந்து இவ்வங்கியின்அன்றாடப் பணிகளை ரிசர்வ் வங்கி முடக்கியது.
இதையடுத்து வங்கியின் எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் அவருடைய வைப்பீட்டுகணக்கிலிருந்து ரூ. 25,000க்கு மேல் அளிப்பதற்கும், புதிய வைப்பீடுகளைப்பெறுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது.
இந்த நிலையில் தற்போதைய தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளிடம் பெற்றஅனைத்துப் பயிர்க்கடனும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
எனவே சொந்த நிதிகளில் ஏற்பட்ட இழப்பு முழுவதுமாக ஈடுகட்டப்படும் நிலை,சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாநில அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சிவகங்கை மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி அனைத்துப் பணிகளையும் தொடரலாம் என ரிசர்வ் வங்கிஅறிவித்துள்ளது.
இதை நாங்கள் வரவேற்கிறோம்.
இதற்குக் காரணமான தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நடவடிக்கை மூலம் வங்கியின் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கி முடக்கப்பட்டதற்கு சிதம்பரம்தான் காரணம்என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்என்று முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா கடுமையாக குற்றம் சாட்டியதுநினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications