10 பேர் படுகொலை: 19 பேருக்கு 7 ஆயுள்!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ஒன்றரை வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரைக் கொலைசெய்த 19 பேருக்கு தலா 7 ஆயுள் தண்டனை வழங்கி ராமநாதபுரம் விரைவுநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது ஓ.கரிசல்குளம். இந்தக் கிராமத்தைச்சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கடந்த 1994ம் ஆண்டு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம். இந்தபயங்கர கொலை தொடர்பாக முத்துமணித்தேவர் உள்ளிட்ட 19 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது ராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அதன்படி 19 பேருக்கும்சராசரியாக தலா 7 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications