தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைக்க செல்போன் நிறுவனங்கள் ஆர்வம்-தயாநிதி
ஊட்டி:
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளைத் துவங்க செல்போன் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என மத்தியதகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.
ஊட்டியில் குறிஞ்சி மலர் தபால் தலையை வெளியிட்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,பி.எஸ்.என்.எல் ஒன் இந்தியா, மற்றும் வில்போன் வடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தொலை தொடர்பு துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டு வருவோம்.
விரைவில் மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் சாப்ட்வேர் நிறுவனங்கள் அமைக்கப்படும்.
நோக்கியா நிறுவனம் தனது செல்போன் உற்பத்தியை சென்னையில் தொடங்கியுள்ளது. மேலும் பல செல்போன்நிறுவனங்களும் தமிழகத்தில் உற்பத்தியை துவக்க ஆர்வம் காட்டியுள்ளன. அவற்றை நிச்சயம் தமிழகத்தில்அமைக்கச் செய்வோம். இதனால் ஏராளமான இளைஞகர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
சென்ற ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் மத்திய அமைச்சர்கள்தமிழகம் வரவே அச்சப்பட்டனர். இப்பொழுது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றுகின்றன. இதனால்தமிழகம் இந்த ஆட்சியில் அபார வளர்ச்சிபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications