3 உழவர் சந்தைகள் மீண்டும் திறப்பு
கோவில்பட்டி:
கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த 3 உழவர் சந்தைகள் இன்று மீண்டும்திறந்து வைக்கப்பட்டன.
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை திட்டம் முந்தையஅதிமுக ஆட்சியில் டக்கப்பட்டது. திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 100 உழவர்சந்தைகளும் மூடப்பட்டன. மற்ற சந்தைகள் அரை உயிருடன் தப்பிப் பிழைத்தன.இந் நிலையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால், உழவர் சந்தைகள் மீண்டும்புத்துயிர் பெற்றுள்ளன. அனைத்து உழவர் சந்தைகளும் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. இன்று 3 உழவர் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 35 கடைகளுடன் புதுப்பிக்கப்பட்ட உழவர்சந்தையை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனியாண்டி இன்று திறந்து வைத்தார்.
விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பழனியாண்டி, முதல் நாளிலேயே நல்லவியாபாரம் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
இதேபோல மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் காஞ்சிபுரத்திலும் இன்று உழவர்சந்தைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திறந்து வைத்தனர்.
வசந்த விழா- திமுக அழைப்பு:
இதற்கிடையே முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியை விவசாயிகள் வசந்த விழாவாக கொண்டாட வேண்டும் என்று திமுக விவசாயஅணிச் செயலாளர் கே.பி.ராமலிங்கம் கோரியுள்ளார்.
விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்த கருணாநிதியின் பிறந்த நாளை வசந்த விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது ரொம்ப ஓவரா இருக்கே கே.பி.ஆர்...












Click it and Unblock the Notifications